Sunday, October 4, 2020
Monday, September 7, 2020
ஹிந்தி தினிப்பை ஏற்று கொண்டதன் விளைவு
ஹிந்தி படித்தால் தமிழ் அழியாது - பார்ப்பனிய அடிமை சங்கி!
பீஹாரின் தாய்மொழி போஜ்புரி மற்றும் மைத்திலி.
வடமேற்கு உ.பியின் தாய்மொழி பிரஜ் பாஷா, தென்மேற்கு உ.பியின் தாய்மொழி புந்தேல்கண்டி வடகிழக்கு உ.பி யின் தாய்மொழி போஜ்புரி,பிரதாப்கர் போன்ற மத்திய உ.பி யில் பேசப்படுவது ஆவ்தி,பிறகு கன்னோஜி என்கிற மொழியும் பேசப்படுகிறது
உத்ராகண்டின் உண்மையான தாய்மொழி கடுவாலி மற்றும் குமோனி
ஹரியானா மாநிலத்தின் தாய்மொழி ஹரியாணி
ராஜஸ்தானில் தாய்மொழி கள் ராஜஸ்தானி,மார்வாரி,மேவாரி,
மத்யபிரதேசத்தின் தாய்மொழிகள் மால்வி,நிமதி,அவதி,பகேலி
காஷ்மீரின் தாய்மொழி காஷ்மிரி மற்றும் உருது, ஜம்முவின் தாய்மொழி டோக்ரி,பாடி, லடாக்கின் மொழி லடாக்கி,
சட்டீஸ்கரில் தாய்மொழி சட்டீஸ்கரி,கோர்பா.
ஜார்கன்டில் தாய்மொழி ஜார்கன்ஷி,சந்த்தலி
மேற்கூறிய மாநிலங்களில் அவர்களின் தாய்மொழியில் இலக்கியங்களோ படைப்புக்களோ வருவதில்லை வரிவடிவமற்ற வெறும் பேச்சு மொழிகளாக அவை சுருங்கிவிட்டன
#ஹிந்து_தெரியாது_போடா
இந்தி மொழி வந்து ஆளுமை பெற்றதால் உண்மையான தாய் மொழிகள் எந்த ஒரு வளர்ச்சியும் இல்லாமல் அழியும் நிலையை எட்டிவிட்டன ஏனென்றால் தாய்மொழி அவர்களுக்கு அவசியமற்றதாகிவிட்டது அவர்கள் தாய்மொழியில் படித்தால் அவர்கள் ஊரிலேயே வேலை கிடைக்காது என்பதால் தாய்மொழி
வெறும் வாய்மொழியாக கற்பிக்கப்படுவதோடு சரி கல்விநிலையங்களில் கற்பிக்கப்படுவதில்லை.
சரி மேற்கூறிய மாநிலங்களில் இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொண்டதால் பொருளாதார வளர்ச்சி கிடைத்துவிட்டதா என்றால் இல்லை
தாய்மொழியை ஆட்சி மொழியாகக்கொண்ட தமிழகத்தைவிட பின்தங்கியே உள்ளன.
சரி கல்வியளிப்பதிலாவது வளர்சியடைந்துள்ளதா என்றால் அதிலும் தமிழகத்தைவிட பலமடங்கு பின்தங்கியே உள்ளன
தனிப்பட்ட முறையில் ஹிந்தியை கற்றுக் கொள்ள எந்த தடையுமில்லை, இங்கு காலம் காலமாக இயங்கிக் கொண்டிருக்கும் ஹிந்தி பிரச்சார சபாக்களே அதற்கு சாட்சி அதனால் நீ ஹிந்தி கற்றுக் கொள்ளும் தமிழனாக இருப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சினையுமில்லை.
Sunday, September 6, 2020
பட்டியலின மக்களுக்கு நன்மைகள் செய்த ஒரே கட்சி திமுகதான்* ஒரே தலைவர் கலைஞர்தான்*
பட்டியலின மக்களுக்கு நன்மைகள் செய்த ஒரே கட்சி திமுகதான்* ஒரே தலைவர் கலைஞர்தான்*
முதன்முதலாக கலைஞர் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட ஒரு சில மாதங்களில் ஏ.என்.சட்டநாதன் தலைமையில் இந்தியாவிலேயே முதன் முதலாக பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.
அக்குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் 1971-ம் ஆண்டில் ஆதிதிராவிடர்களுக்கும், பழங்குடியினருக்கும் சேர்த்துப் பல ஆண்டு காலமாக இருந்த இட ஒதுக்கீடு 16 சதவீதம் என்பது 18 சதவீதம் என உயர்த்தப்பட்டது.
பின்னர், 1990-ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பினையொட்டியும், தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியின மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான 18 சதவீதம் முழுவதையும் ஆதிதிராவிடர் மக்களுக்கென (செட்யூல்ட் வகுப்பினர்) ஒதுக்கீடு செய்ததுடன், பழங்குடியின மக்களுக்கென (செட்யூல்ட் டிரைப்) தனியே ஒரு சதவீதமும் ஒதுக்கீடு செய்து 22.6.1990 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்) ஆணை 1950-ன் கீழ் திருத்தச் சட்டம் 1976 (சட்டம் 108/1976)-ன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 36 சாதியினர் பழங்குடியினர் எனவும், 76 சாதியினர் ஆதிதிராவிடர் இன மக்கள் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீடுகள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் திமுக அரசு மிகுந்த முனைப்புடன் செயல்பட்டது
தமிழ்நாட்டில் வாழும் ஆதி திராவிடர் இன மக்களில் 76 பிரிவினர் உள்ளனர். அவற்றில் அருந்ததியர் ஒரு பிரிவினர் ஆவர். ஆதிதிராவிடர் இன மக்களில் அருந்ததியினர் தமக்கு உள் இட ஒதுக்கீடு கோரி வந்தனர்.
76 பிரிவினர்களாக உள்ள ஆதிதிராவிட இன மக்களில் ஆதிதிராவிடர், பள்ளர், பறையர், சக்கிலியர், மற்றும் அருந்ததியர் ஆகிய 5 பிரிவினர் பெரும்பான்மையினராக உள்ளனர். இந்த 5 பிரிவினர் மொத்த ஆதி திராவிட இன மக்கள் தொகையில் 93.5 சதவீதம். 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் அருந்ததியர் மக்கள் தொகை 7 லட்சத்து 71 ஆயிரத்து 659. சக்கிலிய மக்கள் தொகை 7 லட்சத்து 77 ஆயிரத்து 139. அருந்ததியர் மற்றும் சக்கிலியர் ஆகிய 2 பிரிவுகளையும் சேர்த்தால் அவர்களின் மக்கள் தெகை 15 லட்சத்து 48 ஆயிரத்து 798. இந்த இரு பிரிவினரும் ஆதிதிராவிடரின் மொத்த மக்கள் தொகையில் 13.06 சதவீதம் ஆகும்.
மொத்த ஆதிதிராவிட மக்கள் தொகையான ஒரு கோடியே 18 லட்சத்து 58 ஆயிரம் பேருக்கு 18 சதவீதம் இட ஒதுக்கீடு எனும்போது, அவர்களில் 13.06 சதவீதமான 15 லட்சத்து 48 ஆயிரம் பேரைக் கொண்ட அருந்ததியர் மற்றும் சக்கிலியருக்கு 2.35 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டி வரலாம். தமது கோரிக்கையில், உள் ஒதுக்கீட்டில், இந்து அருந்ததியர்கள், இந்து சக்கிலியர்கள், இந்து மாதாரி, இந்து பகடை என 4 உட்பிரிவுகள் உள்ளன எனவும், இவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக திருமணம் மற்றும் இதர, சமூகச் சடங்குகளை வேறுபாடின்றி நடத்தி வருகின்றனர் எனவும், எனவே அருந்ததியர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்படும்பொழுது இந்து அருந்ததியர், இந்து சக்கிலியர், இந்து பகடை, இந்து மாதாரி என்ற 4 சாதிகளுக்கும் ஒரே அரசாணையாக அறிவிக்கப்பட வேண்டும் எனவும் கோரினர்.
அதை ஏற்று அருந்ததியினருக்கு 3 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கு வதற்கான கொள்கை முடிவு கடந்த 2008-ம் ஆண்டு திமுக ஆட்சியில்தான் எடுக்கப்பட்டது.
பின்னர் அருந்ததியர் சமுதாய மக்களின் முன்னேற்றம் கருதி அவர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி கலைஞர் கடந்த 29.5.2009 அன்று ஆணையிட்டார்.
இந்த இட ஒதுக்கீட்டின்படி, அருந்ததியர் சமுதாய மக்கள் தமிழக அரசின் கல்வி நிறுவனங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் அதிக இடங்களைப் பெற்று முன்னேறி வருகின்றனர்.
இந்த 3 சதவீத இட ஒதுக்கீட்டின் செயல்பாட்டினைத் தொடர்ந்து கண்காணித்து, ஆய்வு செய்வதற்காக தமிழக அரசின் தலைமைச் செயலாளரைத் தலைவராகவும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளரை செயல் உறுப்பினராகவும், உள்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் செயலாளர், ஆசிரியர் தேர்வாணையக் குழுத் தலைவர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர், ஆதிதிராவிடர் நல ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட குழு ஒன்றை அமைத்து கலைஞர்
உத்தரவு பிறப்பித்தார்.
ஆதிதிராவிட மக்களுக்கு சலவைத் தொழிலைச் செய்து, அவர்களுடைய பிறப்பு இறப்புச் சடங்குகளிலே பங்காற்றி, இன்னும் படிப்பறிவிலும், வேலை வாய்ப்பிலும் மிகவும் பின்தங்கியிருக்கின்ற மக்கள், புதிரை வண்ணார்கள் என்று அழைக்கப்படுகின்ற மக்களாவார்கள்.
அவர்களின் மேம்பாட்டிற்கான நல வாரியம் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. (அரசாணை – G.O.Ms.No.1 14, AD & TW(ADW_6) Department, dated 15.10.2009).
எந்த அரசும் ஏறெடுத்துப் பார்க்காத புதிரை வண்ணார் மக்களுக்காக நல வாரியம் உருவாக்கித் தந்த தலைவர் கலைஞர்.
திமுக ஆட்சியிலிருந்த சுமார் 21 ஆண்டுகளில் திமுக பட்டியலின மக்களுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து விட்டதா?
நிச்சயமாக இல்லை. ஆனால் தமிழகத்தை ஆண்ட மற்ற எல்லா கட்சிகளையும் விட பல மடங்கு அதிகமாக திமுகதான் செய்துள்ளது.
தாட்கோ நிறுவப்பட்டது 1974 இல் திமுக ஆட்சியில்தான்.
இந்நிறுவனம் மூலமாக ஆண்டு தோறும் லட்சக்கணக்கில் பயன் பெறுகிறார்கள். எல்லாவற்றிலும் 50% மானியம் உண்டு. பல திட்டங்கள் இலவசம்.
(Tamil Nadu Adi Dravidar Housing and Development Corporation Limited (TAHDCO) was incorporated in 1974 under the Companies Act, 1956 with a objective to improve socio economic status in Tamilnadu of Adi Dravida people)
தலித் மக்களின் கல்வியறிவை மேம்படுத்த ஆதிதிராவிட பள்ளிகளை உருவாக்குதல்,
ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் அளித்தல்,
தாட்கோ & குடிசைமாற்று வாரியத்தின் மூலம் வீடுகளை கட்டித் தருதல்,
உயர்கல்வி பெறுவதற்கு சிறப்பு உதவித் தொகை மற்றும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க சிறப்புப் பயிற்சி -
நாட்டிலேயே ஆதிதிராவிடருக்கு என்று தனியாக நலத்துறை அமைத்ததும் அமைச்சரை நியமித்ததும் திமுகதான்
ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோருக்கு தனித்தனி துறைகள்.
ஆதிதிராவிட நலத்துறை அலுவலர்கள் நியமனம்
ஆதிதிராவிடர்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகள்.
1989,கலைஞர் அரசு, பிஏ, பிஎஸ்சி,பிகாம் படிக்க விரும்பும் பட்டியலினத்திருக்கும், மலை வாழ் சாதியினருக்கும் இலவச கல்வி வழங்கிட சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டார். மேலும் குடும்பத்தில் முதல் வாரிசு யாராவது தொழிற்கல்வி படித்தால், அவர்கள் குடும்பம் ஆண்டிற்கு 15000 ரூபாய்க்கு கீழ் உள்ள பட்டியலினத்தாருக்கும், மலை வாழ் சாதியினருக்கும் கல்வி செலவை அரசே ஏற்கும் என்று அளித்து உத்தரவிட்டார்.
கலைஞர், ஆதி திராவிடருக்கு முந்தைய 1974 ஆட்சியில் 30000 வீடுகளை கட்டி கொடுத்தார், 13 ஆண்டுகளில் வெறும் 36,000 வீடுகளை கட்டி கொடுத்தது அதிமுக அரசு . மீண்டும் 1989-90ல் திமுக ஆட்சியில் 42000 வீடுகளும், 1990-91ல் அதுவே 47000 வீடுகளை கட்டிக்கொடுத்தார். ஆதி திராவிடர்கள் தொழில் முனைவோர் இருந்தால் அவர்களுக்கும் ஆண்டுக்கு 10000 ஊக்கத்தொகை, பிற்பாடு 15000 என்றாக்கி உத்தரவிட்டார்.
2007-ல் தூய்மைப் பணி புரி வோர் நல வாரியத்தை திமுக அரசு தொடங்கியது.
அனைத்து மத்திய மாநில அரசுத் திட்டங்களிலும் ஆதிதிராடர்களுக்கு 33% ஒதுக்கீடும் சிலவற்றில் 50% ம்
வழங்கப்படுகிறது. அது
கட்டாயம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
இந்திரா வீட்டுவசதித் திட்டம் மூலம் வீடுகள் மற்றும்
பெரியார் சமத்துவபுரம் கொண்டு வந்து அனைரும் சமம் என்பதை நிறுவவில்லையா? அதுவும் கலைஞர்தானே.
அம்பேத்கார் பெயரில் சட்டப்பல்கலை கழகம் அமைத்தது கலைஞரே.
கலப்பு திருமண ஆதரவும் ஊக்கத்தொகையும் திமுகதான் வழங்கியது. திமுக ஆட்சியில்தான் மிக அதிக அளவில் பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது
மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீடு என்கிற ஆணையை பிறப்பித்தது திமுகதான்
* முதன்முறையாக தாழ்த்தப்பட்ட வகுப்பாரான வரதராசன் அவர்களை நீதிபதியாக நியமனம்
*பள்ளி இறுதியாண்டு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் பாணவர்களுக்கு சிறப்பு ஊக்க தொகை
*18 சதவீத ஒடுக்கப்பட்ட மாணவர்களின் இடங்கள் புர்த்தியாகாமல் இருக்கும் நிலையில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை நியமிக்க தடை விதித்தார்
*இரட்டை மலை சீனிவாசன் நினைவு தபால் தலை வெளியிட்டார்
*உழுபவர்களுக்கு நிலம் சொந்தம் என்ற திட்டத்தின் படி இரண்டு லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தலா இரண்டு ஏக்கர் விவசாய நிலம் வழங்கப்பட்டது
*தாழ்த்தப்பட்ட இனத்தவர் விமான ஓட்டியாக உருவாக இலவச பயிற்சியை தந்தார்
*அறங்காவலர் குழுவிலும் , கூட்டுறவு நிர்வாகத்திலும் கட்டாயமாக தாழ்த்தப்பட்ட இன பிரநிதி கட்டாயம் அறிவித்தார்
*கலை அறிவியல் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சேர்வதற்கு பள்ளி இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதும் என ஆணை கொண்டு வந்தார் ,பின்னர் இது பொறியியல் கல்லூரிகளிலும் கொண்டு வந்தார்
*சீனிரிட்டி அடிப்படையில் தாழ்த்தப்பட்ட முதன்மை காவலர்கள் சிறப்பு SIகளாக கலைஞர் காலத்தில் பதவியுயர்வு பெற்றனர்
*கல்நார் வீடுகளை கட்டி தந்தார்
*தமிழ்நாடு தேர்வாணையக்குழுவகன் தலைவராக ஆதிதிராவிடர் முருகராஜ் அவர்களை தலைவராக நியமித்தார்
*தன் இல்லங்களில் தாழ்த்தப்பட்டவர்களை சம்மந்தம் செய்தவர் கலைஞர்.....
இன்னும் செய்வதற்கு ஏராளம் இருப்பினும் 21 வருட ஆட்சியில் இதைத்தான் செய்யமுடியும்.
இதில் வேடிக்கை என்னவென்றால் உயர்சாதியினர் திமுகவை வெறுக்க முக்கிய காரணங்கள்
1) திமுக கலப்பு திருமணத்தை ஆதரிப்பது
2) தீண்டாமையை எதிர்க்கிறது
3) திமுக சாதி ஒழிப்பை முன்னெடுக்கிறது
நடுத்தர சாதியினரில் சிலரும் உயர்சாதியினர் பலரும் திமுக சாதி ஒழிப்பிற்கான கட்சி என நினைத்து திமுகவிற்கு ஓட்டே போடுவதில்லை.
#திமுக_என்னும்_மத்தளத்திற்கு_இரண்டு_பக்கமும்_இடிதான்
Antony Parimalam
Friday, September 4, 2020
தமிழுக்கு திமுக என்ன செய்தது ???
திமுக தமிழுக்கு என்ன செய்தது? செய்ததை எல்லாம் சொல்ல ஒரு புத்தகமே எழுதலாம் ஒரு சிலவற்றை கீழே தந்துள்ளேன்.
திமுக தமிழுக்கு என்ன செய்தது?
செய்ததை எல்லாம் சொல்ல ஒரு புத்தகமே எழுதலாம்
ஒரு சிலவற்றை கீழே தந்துள்ளேன்.
1)1970ஆம் ஆண்டில் தமிழ்த் தாய் வாழ்த்தை உருவாக்கியது
2) தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறைக்காக ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கி அந்தத் துறை 13-5-1996 முதல் செயல்பட்டு வருகின்றது.
3) 1974இல் அன்றைய கழக அரசில் “செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்” நிறுவப்பட்டு, மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்கள் அதன் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
4) 1999 பிப்ரவரியில் உலகத் தமிழ் இணைய மாநாடு தமிழக அரசினால் நடத்தப்பட்டு, கணினியின் விசைப்பலகை ஒரே சீராக்கப்பட்டதுடன், உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
5) ஊர்திகளில் காணப்படும் பதிவெண் பலகைகளில் ஆங்கில எழுத்துக்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது அவற்றைத் தமிழில் எழுதிக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டு ஆணையிடப்பட்டது
6) ஆட்சிமொழித் திட்ட விதிமுறைகளின்படி தலைமைச் செயலகத்தில் 65 சதவீதம் தமிழ்த் தட்டச்சுகள் இருக்க வேண்டும்.
7)திராவிடப் பல்கலைக் கழகம்: தென்னக மொழிகளையும், அவற்றிடையே உள்ள உறவுகளையும், ஊடாடி நிற்கும் பண்பாட்டுக் கூறுகளை யும் உறுதி செய்யும் வகையில் ‘குப்பம்’ எனும் நகரில் “திராவிடப் பல்கலைக் கழகம்” தொடங்கப்பட்டது.
8) சிறப்புச் சொல் துணையகராதி: 1972 முதல் புதுப்பிக்கப்படாத அகராதிகளில் துறையின் புதிய சொற்கள் சேர்க்கப்பட்டு முதலில் 10 துறைகளுக்குரிய சிறப்புச் சொல் துணை அகராதிகளைப் புதுப்பித்து வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன
9)தமிழக அரசு எடுத்த முயற்சியின் விளைவாக அனைத்து புகை வண்டிகளிலும் தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டன.‘கம்பன் விரைவு வண்டி’, ‘மலைக்கோட்டை விரைவு வண்டி’, வேகத் தொடர் வண்டி’ முதலிய சொற்றொடர்களை புகை வண்டிகளில் இப்போது காணலாம்
10) :தமிழ்நாட்டில் தமிழ்மொழியை ஒரு பாடமாகச் சொல்லித்தரும் மழலையர், தொடக்க நிலைப் பள்ளிகளுக்கே அரசின் ஏற்பு வழங்கப்படும் என்றும், தாய்த்தமிழ் தொடக்கப் பள்ளிகளுக்குக் கட்டணங்களில் சலுகை வழங்கப்படும் என்றும் ஐந்தாம் வகுப்புவரை அனைத்துப் பாடங்களும் தமிழ் அல்லது தாய்மொழியிலேயே பயிற்று விக்கப்படும் என்றும் முதன்மை மொழியாக தமிழ் அல்லது தாய்மொழியே இருக்குமென்றும் அரசு ஆணையிட்டது
11) தமிழறிஞர்களின் நூற்றாண்டு விழாக்கள்: 19.2.97இல் இ.மு. சுப்பிரமணியன்பிள்ளை, மே.வி.வேணுகோபால் பிள்ளை, 24.12.98இல் மங்கலங் கிழார், 4.8.97இல் மனோன்மணியம் சுந்தரனார், 30.10.1999இல் ராய சொக்கலிங்கம், 13.3.2000இல் கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோரின் நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப்பட்டன.
12) தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெறப்பட்டது
13)மும்மொழித்திட்டத்தை அகற்றி தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து, தமிழகப் பள்ளிகளிலிருந்து இந்திமொழியை அறவே நீக்கியது அண்ணாதான்
14)Tamilnad TAMIL learning Act 2006 ஐ கொண்டுவந்தது
9-6-2006 திமுகதான். இதன் மூலமே தமிழகத்தில் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட்டது.
15) Indian Administrative Exam: If Tamils write the Indian Administrative exam in Tamil, there is a possibility of many getting through the exam. The erstwhile government did not publish any books with this point in mind. A decision to publish books on Tamil Language, history of literature, geography, and history in Tamil was taken and as a first step, the history of Tamil Language was first published.
16) Grammar committee: A grammar committee was formed to write and publish new grammar books for the benefit of modern era students of schools and colleges. The change made was based on the ancient Tamil grammar texts from books such as Tolkāppiyam and Nannul.
17) Encyclopedia: Volumes of the encyclopedia on plays were compiled by Tamil university. Three volumes on music were compiled by Bharathidasan University. Five volumes on medicine were compiled and published by Tamil development board.
18) Tamil shorthand book: About 5,000 copies of Tamil shorthand books were printed and published on 24.12.1998 keeping in mind the necessity of making Tamil shorthand books.
19) Recruitment board: Arrangements have been made so that the question papers would have Tamil questions followed by the English ones.
20) History of Tamil Nadu: The period of Pallavas – Pandiyas part 2, the period of Cholas Part 1and Part 2 were published. The task of compiling the entire history of Tamil Nadu in a single edition is in process.
தமிழில் கையெழுத்திட அரசு ஊழியர்களுக்கு ஆணை பிறபித்தது
கடைகளில் தமிழில் பெயர் கட்டாயமாக எழுத வேண்டும் என உத்தரவிட்டது
ஐயன் திருவள்ளுவருக்கு 133 அடி சிலை
மொழிப்போர் தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்கியது.அவர்களின் வாரிசு ஒருவருக்கு மேற்படிப்பில்,வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கியது.
தமிழ் வளர்ச்சி துறை எனும் புதிய அமைச்சகத்தை உருவாக்கி அதற்கு முதன் முதலாக தமிழ்குடிமகனை அமைச்சராக்கியது.
கல்லூரிகளில் தமிழ் மன்றம்
தமிழ் வழி மாணவர்களுக்கு ஊக்க தொகை
தமிழ்வழியில் பொறியியல் படிப்பு
தமிழ் வழி பயின்றோருக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் ஒதுக்கீடு
தமிழ்நாட்டின் வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகை
என்ற கட்டாய உத்தரவு
தமிழ்நாடு, சென்னை என பெயர் மாற்றம் செய்தது...
Antony Parimalam
Thursday, July 2, 2020
Thursday, June 25, 2020
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை உருவாக யார் காரணம்??
கன்னியாகுமரி வள்ளுவர் சிலையை திறக்க உத்தரவு போட்டது எம்ஜிஆர் #ஹலோ ஆப் #ஷேர் சாட் பைத்தியங்கள் , வரலாறு தெரியாதவர்களுக்கு எப்படி புரியவைப்பேன் #ஆணை பிறப்பித்தது கலைஞர் -1975ல்
#அடிக்கல் நாட்டியவர் எம்ஜிஆர் - 1979
எம்ஜிஆர் ஆண்ட பத்தாண்டுகளில் முடிக்கப்படாத வேலைகளை.
மீண்டும் 1989 ல் ஆட்சிப் பொறுப்பை ஏற்று #பணிகளை தொடங்கி முடித்தார் 7 ஆண்டுகளில் கழித்து 2000 ஆண்டு சிலையை நிறுவியவர் கலைஞர்....
ஒரு #தாய் தன் குழந்தையைப் பெற்றெடுக்க பத்து மாத காலம் எவ்வளவு சிரமப்படுவார்களே ....
அந்தளவுக்கு சிரமத்தை அடைந்து 1975 முதல் 2000 ஆண்டுவரை 25 ஆண்டு காலம் #முயற்சியைக் கைவிடாமல் பொறுமையுடன் திருவள்ளுவருக்கு சிலை உருவாக்கினார் கலைஞர்
இடையில் அதிமுக 5 ஆண்டுகள் ஆட்சி ஒரு மண்ணும் செய்ய வில்லை.
ஆதாரம் இன்றளவும் கன்னியாகுமரியில் இருக்கிறது சந்தேகம் உள்ளவர்கள் சென்று பார்த்துக்கொள்ளலாம்
வரலாறு தெரிந்தால் அரசியல் பேசுங்கள் மற்றவர் சொல்லும் பொய்யை நம்பி உளறிக் கொண்டு இருக்காதீர்கள்
#திருவள்ளுவன்_கன்னியாகுமரி
https://www.facebook.com/100000243388952/posts/4366383796713023/
Wednesday, June 17, 2020
திமுகவை எதிர்க்கும் அல்லகைகள் நோக்கம் , மக்கள் நலனில் அக்கறை இல்லாத அய்யோக்கியர்கள்
#கணக்கு கேட்டாங்கனு ஒருத்தன்
கட்சி ஆரம்பித்தான்
#மண்டபத்தை காணோம்னு ஒருத்தன்
கட்சி ஆரம்பித்தான்
அரசியலில் #வெற்றிடம் இருக்குனு ஒருத்தன்
கட்சி ஆரம்பிக்கிறான்
பிழைப்பு இல்லைனு #பார்ட்டைம்
அரசியல்னு ஒருத்தன் கட்சி ஆரம்பித்தான் (ட்வீட்டர் நாயகன்)
#ஜாதி பெயரை சொல்லி ஒருத்தன்
கட்சி ஆரம்பித்தான்
என்னை தவிர மற்றவர்கள்
#வந்தேறின்னு ஒருத்தன்
கட்சி ஆரம்பித்தான்
எவனாச்சி ஒருத்தன் சரியான வயதில் #சரியான_காரணத்தால் மக்களுக்கு சேவை செய்யனு கட்சி ஆரம்பித்தானா பாருங்க நீங்களே புரிந்து கொள்ளுங்கள் இவர்களின் #நோக்கம் என்ன வென்று..!
Kumaran Sathish
Thursday, June 11, 2020
ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு உதவ சொன்னது திமுக செய்த தவறு... கதறல் நாய்களின் அறைகூவல்
திமுக மீதுள்ள காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பு அரசியலும் #சங்கிகளையும் #நடுநிலை, அதிமுக அடிமை களையும் எங்கு கொண்டு வந்து நிறுத்துகிறது பார்த்தீர்களா.
ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு உதவ சொன்னது திமுக செய்த தவறு... கதறல் நாய்களின் அறைகூவல்
நீ சொல்வதெல்லாம் சரிதான்
ஊரடங்கு நேரத்தில் பெட்டிப்பாம்பாக அடங்கி கிடக்க நாங்கள் அடிமை அதிமுக அல்ல.
ஊரடங்கு நேரத்தில் வானொலியில் மட்டும் பேசிவிட்டு மக்கள் மீது அக்கறை இல்லாமல் பொறுப்பைத் தட்டிக் கழிக்க பாலியல் ஜல்சா கட்சியும் அல்ல...
ஊரடங்கு நேரத்தில் இரண்டு மொபைலை வைத்துக்கொண்டு எந்நேரமும் பிடிக்காதவர்கள் வசை பாடிக் கொண்டிருக்க நாங்கள் ஒன்றும் சாமான் தும்பிகள் அல்ல.
ஊரடங்கு நேரத்தில் கேட் வாசலில் நின்று பேட்டி கொடுத்துவிட்டு சிஸ்டம் சரி இல்லை என்று ஒப்பாரி வைக்க நாங்கள் ஒன்றும் ரசிக்க குஞ்சுகள் அல்ல....
ஊரடங்கு நேரத்தில் காய்கறிகளுக்கு பெயர் வைத்துக்கொண்டு ஓனருக்கு சேவகம் செய்து கொண்டிருக்க மாங்காய் கட்சியும் அல்ல
பொங்கலும் புளியோதரையும் கிடைத்தால் மட்டும் போதும் என்று மக்கள் மீது அக்கறை இல்லாது அடங்கிக் கிடக்க நாங்கள் ஒன்னும் அதிகாரத் திமிர் கொண்ட ஆரியக் கூட்டம் அல்ல
எந்நேரமும் மக்கள் பணியை செய்து கொண்டு மக்களுக்காக கட்சியை வளர்க்கும் திராவிட கூட்டம் #கலைஞரின் பட்டாளம் #அண்ணாவின் #வேர்கள் , #பெரியாரின் பேரப்பிள்ளைகள் நாங்கள்
இறப்பு என்பது என்றோ ஒரு நாள் வரத்தான் போகிறது அது மக்களுக்காக வருகிறது என்றால் அதை சிரம் தாழ்ந்து ஏற்பான் திராவிட தமிழன்.
மக்கள் சேவை எல்லாம் சுட்டுப் போட்டாலும் கூட உங்களுக்கெல்லாம் வராது ஏனென்றால் பணத்திற்காக எதையும் தின்னும் பேமானிகள் நீங்கள்
Tuesday, March 31, 2020
70 பேர் கொண்ட மருத்துவப் படையை களமிறக்கிய திமுக 👇👇 கொரான பேரிடர் ரை சமாளிக்க அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் திமுக
70 பேர் கொண்ட மருத்துவப் படையை களமிறக்கிய திமுக 👇👇
திமுக மருத்துவர் அணி செயலாளர் பூங்கோதை ஆலடி அருணாவை நாம் தொடர்பு கொண்டு பேசிய போது, ''
எங்கள் தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியதன் பேரில் நாங்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளோம். இன்று கூட திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து டயாலிஸிஸ் செய்து வரும் ஒருவர் என்னை அழைத்து, டயாலிஸிஸ் மையத்திற்கு சென்று வர ஆம்புலன்ஸ் கிடைப்பது அரிதாக உள்ளது, ஆகையால் தமக்கு மாற்று உதவி வேண்டும் எனக் கேட்டார். உடனடியாக எங்கள் திருவள்ளூர் மாவட்ட மருத்துவர் அணி நிர்வாகியை தொடர்பு கொண்டு தகவலை கூறினேன், அவர் அந்த நபர் கூறிய தகவலை உறுதிபடுத்திய பின்பு ஆட்டோவில் செல்வதற்காக ரூ.6,000 உதவித் தொகை வழங்கியுள்ளோம்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், ''இதுமட்டுமல்லாமல் எங்கள் குழுவில் மகப்பேறு மருத்துவர்கள் உள்ளதால் கர்ப்பிணி பெண்கள் பலரும் அலைபேசி மூலம் அழைத்து ஆலோசனைகள் கேட்கின்றனர்.
மேலும், யாராவது காய்ச்சல் உள்ளிட்ட சில பிரச்சனைகள் இருப்பதாக கூறினால் நாங்களே அவர்களை அரசு மருத்துவமனைக்கு சென்று உடனடியாக சோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்'' என்றார்.
கொரோனா சிகிச்சை வார்டாக பயன்படுத்திக்கொள்ளுமாறு கலைஞர் அரங்கை இன்று காலை மு.க.ஸ்டாலின் வழங்கிய நிலையில், அடுத்தகட்டமாக மருத்துவர் அணியையும் களமிறக்கியுள்ளார்
Sunday, March 29, 2020
மாநில சுயாட்சி முக்கியத்துவத்தை இப்போது உணர்ந்து இருப்பார்கள் வட நாட்டு அறிவு மேதைகள்
மாநில சுயாட்சி முக்கியத்துவத்தை இப்போது உணர்ந்து இருப்பார்கள் வட நாட்டு அறிவு மேதைகள்
நன்றி Shine Kumar
#கண்ணுக்கே #தெரியாத #கிருமியை #எதிர்த்து #போராடும் #மாநில #சுயாட்சி #எனும் #ஒற்றை #ஆயுதம்..!!
உலகத்தையே ஆட்டிப்படைத்து , இன்னொரு நாட்டையே தன் படைபலத்தால் குறைந்த நேரத்தில் கபளீகரம் செய்யலாம் என கர்வத்துடன் சுற்றத்திரியும் வல்லரசு நாடுகளையே ஆட்டிப்படைக்கும் ஒரு கிருமியை அழிக்க வழி தெரியாமல் தத்தளிப்பதற்கு பின்னால் இருப்பது அறிவியலின் தோல்வி அல்ல , அது ஒரு நாட்டின் சித்தாந்த்ததின் தோல்வி.
ஆம் அது தான் ஒரு நாட்டில் ஒரே தலைமையின் கீழான அதிகார குவிப்பு ( உதா: ஒரே நாடு ,ஒரே மொழி , ஒரே அதிகாரம் -என இந்தியாவில் ஆக்க துடிக்கும் ஆட்சியாளர்கள்)
இன்று இந்தியா முழுக்க கொரோனாவிற்கு எதிராக மாநில தலைவர்கள்தான் தீவிரமாக போராடி வருகிறார்கள். அதற்கு சிறந்த உதாரணமாக ஒடிசா, தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிராவை கூறலாம்.
பினராயி விஜயனால் கேரளாவிலும் , மம்தாவால் மேற்கு வங்கத்திலும் ,பட்நாயக்கால் ஒடிசாவிலும் , உத்தவ் தாக்கரேவால் மகாராஷ்டிராவிலும் தன்னிச்சையான முடிவெடுத்து கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்க முடிகிறதென்றால் , அந்த ஒற்றை ஆயுதத்தின் பெயர் " #மாநில_சுயாட்சி"
மாநில சுயாட்சி இல்லையென்றால், மாநில தலைவர்கள் இல்லையென்றால் இந்த கொரோனா போராட்டத்தில் எப்போதோ இந்தியா தோல்வி அடைந்து இருக்கும்.
அதிகாரம் டெல்லியில் மட்டும் குவிந்து இருந்தால் இது சாத்தியம் ஆகி இருக்காது. டெல்லி மட்டும்தான் முடிவு எடுக்கும் என்ற நிலை இருந்து இருந்தால் இந்தியா இதில் தோல்வி அடைந்திருக்கும்.
தலைமை அதிகாரம் மாநிலம் முழுக்க பரவி இருக்கிறது. இதனால் மாநில கட்சிகள் சுயமாக முடிவு எடுக்க முடிகிறது. தங்களுக்கு ஏற்ற சட்டங்களை கொண்டு வர முடிகிறது. இதுதான் கொரோனா போரில் நாம் முன்னே நிற்க காரணம். ஒரே நாடு, ஒரே கொள்கை என்ற நிலை இருந்து இருந்தால்.. இந்தியா கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி இருக்கும். பிரதமர் மோடி மட்டும்தான் முடிவை எடுப்பார் என்ற நிலை இருந்தால், நினைத்து பார்க்க முடியாத பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கும்.
சீனா, அமெரிக்கா, இத்தாலி என்று மூன்று நாடுகளிலும் சக்தி எல்லாம் ஒரே தலைவரிடம் குவிந்து இருக்கிறது. இதுதான் அங்கு கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு முக்கிய காரணம். சீனா இதை இப்போதுதான் உணர்ந்து கொண்டு இருக்கிறது. இத்தாலி இன்னும் உணரவில்லை.
இப்போதுதான் அதிகார பரவலை சீனா முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் இந்தியாவின் மாநில சுயாட்சி உலகம் முழுவதற்கு ஒரு எடுத்துக்கட்டாக மாறி உள்ளது தமிழ்நாடு
ஆம் அதற்கு பின்னால் இருக்கும் சிற்பி
கலைஞர் எனும் ஒற்றை மந்திரச்சொல்.
பிப்ரவரி 10- 1969...
இன்றைக்கு மிகச் சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்னால், ‘மு.கருணாநிதி என்னும் நான்' என்ற கரகரத்த குரலுடன் சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் சர்தார் உஜ்ஜல் சிங் முன்னால் தமிழக முதல்வராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் கலைஞர்.
1967 ஆம் ஆண்டு அண்ணா ஆட்சிப் பொறுப்பினை ஏற்று தமிழ்நாட்டின் முதல்வர் என்ற பொறுப்பை அவர் வகித்தபோது தனது அனுபவத்திலேயே மத்திய மாநில உறவுகளில் எவ்வளவு சிக்கல் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார்
அண்ணா மறைவுக்குப் பின்னர் 10-02-1969 அன்று முதல்வராகப் பொறுப்பேற்றார் கலைஞர். சாதனை வீரரான கலைஞர் பல அரிய சாதனைகளை நிகழ்த்திக் காட்டினார். அதில் முக்கியமாக அண்ணா வலியுறுத்திய மாநில சுயாட்சிக்கு ஒரு வடிவம் கொடுக்கத் தொடங்கினார்.
அண்ணா முன் மொழிந்த மாநில சுயாட்சிக் கொள்கைக்கு கலைஞர் அவர்கள் வடிவம் கொடுத்தார்.
மாநில சுயாட்சிக்கு ராஜமன்னார் குழு அமைத்து ஆராய்ந்து ,1974 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த கலைஞர் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றினார்.
இன்று சீனா அதிகாரப்பரவலை , சுருங்க சொல்லவேண்டுமென்றால் மாநில சுயாட்சியை கையிலெடுக்கிறது ,
இந்தியாவோ , ஒரே நாடு , ஒரே மொழி என்கிறது ,இந்தியா முழுதும் மாநில சுயாட்சி மாநாடுகளை திமுக முன்னெடுக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது,அவ்வாறு நடத்தினால், இந்தியாவுக்கே தமிழகம் மீண்டும் வழிகாட்டத் தொடங்கும். மாநில சுயாட்சிக் குரல் நாடு முழுதும் எழுந்தால் மத்திய அரசின் அதிகாரக் குவிப்பும் அடங்கும்!
நான் யார்?
#நான்_யார் ?
1938ல் எந்த ஆசிரியரால் அறையப்பட்டேனோ அதே ஆசிரியர்
1973ல் என்னை வைத்து கட்டிடம் திறக்க வைத்தவன்,
1950களில்
எம்ஜிஆர்,சிவாஜி உள்ளிட்டோருக்கு
கதாநாயகன் வாய்ப்பு வாங்கி கொடுத்தவன்,
1957 முதல் உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்றவன்.
1971ல் 184 தொகுதிளில் கட்சியை வெற்றிபெறச் செய்தவன்,
விடுதலைநாளில் மாநில முதல்வர்கள் தேசிய கொடி ஏற்றும் உரிமையை வாங்கித் தந்தவன்,
எமெர்ஜன்சியை துணிவோடு எதிர்த்து நின்றவன்,
1977ல் தோற்ற இந்திராகாந்திக்கு 1980ல் மீண்டும் பிரதமராக உதவியவன்,
பத்து வருடங்களுக்கு எம்ஜிஆர் கண்ணில் விரலை விட்டு ஆட்டியவன்,
கட்சிக்கு அலுவலகம் தரமாட்டேன் என்று சொன்னவருக்கு சவாலாக
அண்ணா அறிவாலயம் கட்டியவன்.
90ல் ஒரு எம்பி கூட இல்லாமல் காவிரி நடுவர் மன்றம் உருவாக்கியவன்.
1996லேயே இந்தியாவிலேயே மாநிலங்களில் முதன் முதலாக ஐடி கொள்கையை உருவாக்கியவன்.
2004ல் தமிழ்மொழியை செம்மொழியாக்கி
2010 உலக செம்மொழி மாநாடு நடத்தியவன்,
ஒருமுறை கூட தேர்தலில் தோற்காதவன்,
என்னை எதிர்த்த அனைத்து அரசியல் எதிரிகளுக்குமே
இரங்கற்பா எழுதியவன்.
எனது விருப்பமான, கடற்கரையில் அண்ணனின் அருகில் அடக்கம் செய்ய இடம் கொடுக்காத அரசை எதிர்த்து இந்த இட ஒதுக்கீட்டிலும் வெற்றிப் பெற்றவன்.
என்னை பற்றி எனக்கு பின்பும் எனது சாதனைகளை பேச வைத்து உங்களோடு வாழ்பவன்.
இவண்,
Saturday, March 28, 2020
அணைக்கட்டு தொகுதி செதுவாலையில் நரிக்குறவர் குடும்பங்கள் கொரானா ஊரடங்கு உத்தரவால் பசியால் இருக்கிறார்கள் என்று அறிந்த உடன் அவர்களுக்கு உதவிய திமுக. எம்எல்ஏ நந்தகுமார்
.அணைக்கட்டு தொகுதி செதுவாலையில் நரிக்குறவர் குடும்பங்கள் கொரானா ஊரடங்கு உத்தரவால் பசியால் இருக்கிறார்கள் என்று அறிந்த உடன் அவர்களுக்கு தலா 10KG அரிசி வழங்கி அந்த மக்களின் பசியை போக்கிய AP நந்தகுமார் MLA
நரிகுறவர்களுக்கு வாக்கு இல்லை என்று தெரிந்தும் சில விளம்பர அரசியல் செய்வோருக்கு மத்தியில் இப்படியும் ஒரு திமுக MLA மாண்புமிகு நந்தகுமார்
ஸ்டிக்கர்ஸ் பழக்கம் இல்லை..!!
திமுக கழகத்_தலைவர்_தளபதியாா் அவர்களின் ஆணைப்படி,1000 ஏழை கூலி தொழிலாளர்கள் குடும்பத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ,முகக்கவசம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
#கழகத்_தலைவர்_தளபதியாா் அவர்களின் ஆணைப்படி,
1000 ஏழை கூலி தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா 2 கிலோ அரிசி,1 கிலோ காய்கறிகள்,முகக்கவசம் மற்றும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
சேலம் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் அண்ணன் உயர்திரு
#எஸ்_ஆர்_சிவலிங்கம்_Ex_MLA அவர்கள் தலைமையில்,
சேலம் நாடாளுமன்ற உறுப்பினர்அண்ணன் திரு.SR.#பார்த்திபன் MP அவர்களும்
வீரபாண்டி ஒன்றியத்தில்
முருங்கப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட
லவங்கம்ப்பட்டி காலனியில் கூலி தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா 2 கிலோ அரிசி,1கிலோ காய்கறிகள்,முகக்கவசம் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றை மாவட்ட வீடு,வீடாக சென்று வழங்கினார்கள்.
தினமும் வேலைக்கு சென்றால் தான் உணவு என்ற பரிதாப நிலையில் உள்ள ஏழைக்குடும்பங்களுக்கு வழங்கியதை மக்கள் கண்ணீரோடு நன்றி கூறி பெற்றுக்கொண்டார்கள்.
சொகுசு விடுதியை COVID 19 க்காக மருத்துவமனையாக மாற்றிய #திமுக #சோழிங்கநல்லூர் MLA
சொகுசு விடுதியை COVID 19 க்காக மருத்துவமனையாக மாற்றிய #திமுக #சோழிங்கநல்லூர் MLA
தற்போது திமுக தலைவர் திரு.மு.க ஸ்டாலின் அவர்கள் தங்களது சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் என அனைவரையும் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பிற்காக உதவிட வேண்டும் என்று அன்பு கட்டளையிட அனைத்து திமுகழக உடன்பிறப்புகள் களத்தில் இரங்கியுள்ளனர்.
மற்றும் அனைத்து சட்ட மன்ற பாராளுமன்ற உறுப்பினர்ளும் தங்களது ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளனர்கள்.
இதற்க்கு அடுத்தபடியாக தமிழகத்தின் பெரிய தொகுதிகளில் ஒன்று சோழிங்கநல்லூர் அதன் #திமுக சட்ட மன்ற உறுப்பினர் திரு #அரவிந்த்ரமேஷ் அவர்கள் தனக்கு சொந்தமான 29 குளிருட்டபட்ட தனி தனி அறைகள் கொண்ட தனது சொகுசு விடுதியை கொரோனா வைரசினால் பாதிக்கபட்ட நோயாளிகள் குணமாகும்வரை மருத்துவமனையாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மாநகராட்சி அலுவலரிடம் கடிதம் தந்துள்ளார்.
எதிர்கட்சியாக இருந்தாலும் திமுக என்றும் மக்களுக்கு தோழமை கட்சி தான் என்று நிருபனம் ஆகியுள்ளது!
போலியோ ஒழிப்பில் இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த திராவிட தமிழ்நாடு
பேராசிரியர் 1972ம் ஆண்டு சுகாதாரத்துறை அமைச்சர். கருத்தரங்கு ஒன்றிற்காக வெளிநாடு சென்றிருந்தார்.
போலியோ ஒழிப்பு மருந்து இருப்பதை அறிந்து அதை தமிழகத்தில் இறக்குமதி செய்தார்.
சுகாதார பணியாளர்கள் மூலம் எப்படி கொடுப்பது என்று முதல்வர் கலைஞர் விவாதம் நடத்தினார்.
"ஊசி மருந்து இல்லை தானே, மற்ற துறையான ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் மூலமும் கொடுக்கலாமே" என்று கேட்டுவிட்டு நடைமுறைப்படுத்தினார்.
எண்ணிக்கை போதவில்லை. மேலும் ஆட்பலம் தேவைப்படவே மீண்டும் கூட்டம் கூட்டப்பட்டது.
தனியார் நிறுவனங்கள், NGO க்கள் ரோட்டரி சங்கங்களை அழைத்து அவர்களையும் ஈடுபட செய்யலாமே என்று கலைஞர் கேட்க,
தனியாரிடம் சென்றால் அரசாங்கத்திற்கு கெட்ட பெயர், நிர்வாகம் சரியில்லை என்பார்கள் என்று தலைமை செயலாளர் கூற,
"இந்த அரசாங்கம் ஊனமாக இருந்தாலும் பரவாயில்லை, என் மக்கள் ஊனமாக இருக்க கூடாது"
அவர்களையும் போலியோ ஒழிப்பில் ஈடுபடுத்த உத்தரவிட்டார்.
அப்போது பேராசிரியர் சொன்னார்
"என்னை இரண்டாமிடம் என்று கிண்டல் செய்வார்கள். செய்யட்டும். என்னுள் எழுந்தது பொறி மட்டுமே. ஆனால் அதற்கு செயலாக்கம் கொடுத்தது கலைஞர் தான். செயலூக்கம் உள்ளவருக்கு அடுத்த இடத்தில் இருப்பது பெருமையே" என்றார்.
#தமிழகம் 1983ல் போலியோ இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
#இந்தியா 2019ல் போலியோ இல்லாத நாடாக அறிவித்துக்கொண்டது.
சத்தமா சொல்லுவோம்டா!!
*திராவிடத்தால் வாழ்ந்தோம்!*
*திராவிடத்தால் வாழ்ந்தோம்..!!*
*திராவிடத்தால் வாழ்ந்தோம்..!!!*
Thursday, March 26, 2020
காசி, உஜ்ஜியினியில் சிக்கிய மதுரைவாசிகள் - பணம் அனுப்பி உதவிய திமுக எம்.எல்.ஏ சரவணன்
காசி, உஜ்ஜியினியில் சிக்கிய மதுரைவாசிகள் - பணம் அனுப்பி உதவிய திமுக எம்.எல்.ஏ
#covid19 | #CoronaVirus
மதுரையை சேர்ந்தவர்கள் காசிக்கு ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு அவர்கள் உணவிற்கு பணம் இல்லாமல் தவிப்பதை அறிந்த திமுக எம். எல். ஏ. சரவணன், ரூ 20 ஆயிரம் அனுப்பி வைத்து உதவியுள்ளார். மேலும் மதுரையை சேர்ந்த 14 பேர் காசியிலும், 24 பேர் உஜ்ஜயினியிலும் தவிப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அவர்களுக்கும், காசியில் இருப்பவர்களுக்கு ரூ 10 ஆயிரமும், உஜ்ஜயினியில் இருப்பவர்களுக்கு ரூ 10 ஆயிரமும் உடனடியாக அனுப்பி வைத்துள்ளார்.https://twitter.com/ThanthiTV/status/1243363684748910592?s=19
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் தங்களுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வாங்க இதுவரைக்கும் யார் யார் எவ்வளவு தொகையை விபரம்
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் தங்களுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வாங்க இதுவரைக்கும் யார் யார் எவ்வளவு தொகையை ஒதுக்கீடு செய்து இருக்கிறார்கள் என்று பார்ப்போம்..
✔️திரு. @SuVe4Madurai MP -ரூபாய் 56.17 லட்சம்
மதுரை தொகுதி
✔️திருமதி @ThamizhachiTh MP - ஒரு கோடி ரூபாய்
தென் சென்னை தொகுதி
✔️ திரு @GnanathiraviamS - ரூபாய் 60லட்சம்
நெல்லை தொகுதி
✔️திரு. @kshanmugamdmk MP - ரூபாய் 50 லட்சம்
பொள்ளாச்சி தொகுதி
✔️திரு.வைகோ MP - ரூபாய் 1 கோடி.
✔️திரு. K. சுப்புராயன் எம். பி - ரூபாய் 50 லட்சம்
திருப்பூர் தொகுதி
✔️திரு. @SSP_MANICKAM MP - ரூ.5 கோடி
தஞ்சை தொகுதி
✔️ திரு. @SigamaniGautham MP - 20 லட்சம்
கள்ளக்குறிச்சி தொகுதி
✔️ செல்வி. @jothims MP - ரூபாய் 1,32,71,940 (ஒரு கோடியே முப்பத்திரண்டு லட்சத்து எழுபத்தோராயித்து தொள்ளாயிரத்து நாற்பது)
கரூர் தொகுதி
✔️திரு. P. R. நடராஜன் MP - ரூபாய் 1 கோடி
கோவை தொகுதி
✔️திரு. @thirumaofficial MP - ரூபாய் 1,26,61000 (ஒருகோடியே இருபத்தாறு இலட்சத்து அறுபத்தோராயிரம்)
சிதம்பரம் தொகுதி
✔️ திரு. @DrSenthil_MDRD MP - ரூபாய் 1 கோடி
தர்மபுரி தொகுதி
✔️திரு. @ThiruArasarINC - ரூபாய் 1 கோடியே 20 லட்சம்
திருச்சி தொகுதி
தொடர்ச்சி
✔️ திரு @WriterRavikumar - ரூபாய் 5 லட்சம்
விழுப்புரம்
✔️ திரு @KNavaskani - ரூபாய் 20 லட்சம்
ராமநாதபுரம்
✔️ திரு பாரிவேந்தர் MP - ரூபாய் 1 கோடி
பெரம்பலூர் தொகுதி
✔️ திரு. AKP.சின்ராஜ் MP - ரூபாய் 1 கோடி
நாமக்கல் தொகுதி
✔️திரு. எம். செல்வராஜ் MP - ரூபாய் 60 லட்சம்
நாகை தொகுதி
Wednesday, March 25, 2020
அன்று துறை முருகனை கிண்டல் செய்த எடப்பாடி அவர்களே இன்றைய தமிழகத்தின் நிலைக்கு என்ன பதில்??
சட்டசபையை ஒத்தி வையுங்கள், பெருநகரங்களை தனிமைப் படுத்துங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவியுங்கள், தேர்வுகளை ரத்து செய்யுங்கள், கொரோனாவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுங்கள் என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சொன்ன போது......
இங்கே எந்த பாதிப்பும் இல்லை, சட்டமன்றத்தை ஒத்தி வைக்க வேண்டிய அவசியமில்லை, நீங்கள் பயப்பட வேண்டாம் என பதில் வந்தது முதல்வர் எடப்பாடியிடமிருந்து. இன்னும் கூடுதலாக துரைமுருகனைப் பார்த்து,70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான் கொரோனா பாதிப்பு வரும் என்பதால் நீங்கள் பயப்படுகிறீர்கள் என்று கிண்டலாக பதிலளித்தார் எடப்பாடி.
இதெல்லாம் 2 வாரங்களுக்கு முன்பு
ஆனால் இன்று....?
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஸ்டாலின் சொன்னதைத் தான் செய்து கொண்டிருக்கிறது தமிழக அரசு....!
அதிமுக வீம்பு அரசியல் செய்ய வேண்டாம் ஒன் இன்டியா நாளேடு தலையங்கம்
#காழ்புணர்ச்சி அரசியல்
படித்து படித்து சொன்ன ஸ்டாலின்.. கொஞ்சம் கூட காதில் வாங்காத தமிழக அரசு.. கடைசியில் நிலைமை இதுதான்!
சென்னை: தமிழகத்தில் கொரோனாவிற்கு இடையிலும் +1, +2 தேர்வுகள் நடத்தப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று +2 தேர்வு நடத்தப்பட்டது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ்.. இந்த கொடூரமான வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு அதிகம் பரவ காரணமே மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதுதான். அதாவது கொரோனா வைரஸ் உள்ள ஒருவர் வைரஸ் இல்லாத ஒருவரை தொடர்பு கொள்வதன் மூலம்தான் இந்த வைரஸ் பரவுகிறது.
இதனால்தான் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் தனியே வீடுகளில் மருத்துவமனைகளில் வைக்கப்படுகிறார்கள். மக்கள் எல்லோரும் வீட்டிற்கு உள்ளேயே இருக்க வேண்டும் என்று இதனால்தான் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அரசு மோசம்
தமிழகம் அரசு மோசம்
இதனால்தான் நாடு முழுக்க கொரோனா வைரஸை எதிர்க்கும் வகையில், 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. நாடு முழுக்க நேற்று இரவு 12 மணியில் இருந்து இந்த ஊரடங்கு அமலில் இருக்கிறது. தமிழகத்திலும் கூட 144 அமலில் உள்ளது. இத்தனை விஷயங்கள் இருக்கும் நிலையில் தமிழகத்தில் நேற்று +2 தேர்வுகள் நடத்தப்பட்டது. 144க்கும் இடையில் நேற்றுக்கு 12 தேர்வு எழுத மாணவர்கள் சென்றனர்.
ஸ்டாலின் என்ன சொன்னார்
ஸ்டாலின் எதிர்த்தார்
தமிழகத்தில் கொரோனா காரணமாக தொடர்ந்து +2 தேர்வை எதிர்த்து வந்தவர் திமுக தலைவர் ஸ்டாலின்தான். தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று முதலில் கூறியது ஸ்டாலின்தான். 11&12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்து கொரோனா அச்சுறுத்தலை அதிமுக அரசு அலட்சியப்படுத்துகிறதா மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் தேர்வுகள் ரத்தாகியுள்ள நிலையில்- மாணவர்களின் பாதுகாப்புடன் விபரீத விளையாட்டு நடத்தாமல்,தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் அரசு கேட்கவில்லை
அரசு கொஞ்சம் கூட கேட்கவேயில்லை
ஆனால் இதை தமிழக அரசு கொஞ்சம் கூட காதில் வாங்கிக் கொள்ளவில்லை. வீம்பாக தேர்வு நடத்தியே தீருவோம் என்று கூறியது. கண்துடைப்பு சம்பவம் போல வெறும் 30 நிமிடம் மட்டும் தேர்வு நேரத்தை தள்ளி வைத்தது. 10 மணிக்கு பதிலாக 10.30க்கு தேர்வு தொடங்கும் என்று கூறியது. அதோடு நேற்று தேர்வும் திட்டமிட்டபடி நடத்தப்பட்டது. பேருந்துகள் இல்லை, ஆட்டோ, டாக்சிகள் இல்லை என்றாலும் கூட தேர்வு நடந்தது.
மாணவர்கள்
மாணவர்கள் தேர்வு எழுதவில்லை
ஆனால் இந்த தேர்வை எழுத நேற்று 68-70 ஆயிரம் மாணவர்கள் வரவில்லை. முதலில் 36 ஆயிரம் பேர்தான் எழுதவில்லை என்று கூறப்பட்டது. தற்போது 70 ஆயிரம் பேர் வரை தேர்வை எழுதவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பேருந்து இல்லாததாலும், கொரோனா அச்சம் காரணமாகவும் பலர் தேர்வை எழுதவில்லை. முக்கியமாக சென்னை கோவையில்தான் பலர் இந்த தேர்வை எழுதவில்லை.
மீண்டும் தேதி
மறு தேதி அறிவிப்பு
இந்த நிலையில் இவர்களுக்காக தற்போது மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு 24.3.2020 அன்று +2 தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் வேறொரு நாளில் தனியாக தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. முன்பே செய்திருக்க வேண்டிய வேலையை தற்போது அரசு தாமதமாக செய்துள்ளது.
விளையாட்டு
இதில் என்ன விளையாட்டு
தமிழக அரசு முன்பே இதை செய்து இருந்தால் மாணவர்கள் பலர் நேற்று போய் தேர்வு எழுதி இருக்க வேண்டிய அவசியம் இருந்து இருக்காது. கஷ்டப்பட்டு கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் சென்னையிலும், காஞ்சிபுரத்திலும் மாணவர்கள் சென்று தேர்வு எழுதி இருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. அரசு கொஞ்சம் முன் யோசனையோடு செயல்பட்டு இருந்தால் மாணவர்கள் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திருக்க வேண்டியது இல்லை.
ஸ்டாலின்
அரசியல் வீம்பு வேண்டாம்
தேர்வு போனால் திரும்ப வரும், ஆனால் உயிர் போனால் திரும்ப வருமா?. திமுக தலைவர் ஸ்டாலின் சொன்னார் என்ற ஒரே காரணத்திற்காக தேர்வை ஒத்திவைக்காமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம். நாடு முழுக்க முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இப்போதும் கூட தமிழக அரசு +2 தேர்வை ஒத்திவைப்பதாக அறிவிக்கவில்லை. இன்னும் தேர்வை ஒத்திவைப்பது தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிடவில்லைhttps://t.co/BnWc0P1HKj
படித்து படித்து சொன்ன ஸ்டாலின்.. கொஞ்சம் கூட காதில் வாங்காத தமிழக அரசு.. கடைசியில் நிலைமை இதுதான்!
சென்னை: தமிழகத்தில் கொரோனாவிற்கு இடையிலும் +1, +2 தேர்வுகள் நடத்தப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று +2 தேர்வு நடத்தப்பட்டது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ்.. இந்த கொடூரமான வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு அதிகம் பரவ காரணமே மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதுதான். அதாவது கொரோனா வைரஸ் உள்ள ஒருவர் வைரஸ் இல்லாத ஒருவரை தொடர்பு கொள்வதன் மூலம்தான் இந்த வைரஸ் பரவுகிறது.
இதனால்தான் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் தனியே வீடுகளில் மருத்துவமனைகளில் வைக்கப்படுகிறார்கள். மக்கள் எல்லோரும் வீட்டிற்கு உள்ளேயே இருக்க வேண்டும் என்று இதனால்தான் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அரசு மோசம்
தமிழகம் அரசு மோசம்
இதனால்தான் நாடு முழுக்க கொரோனா வைரஸை எதிர்க்கும் வகையில், 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. நாடு முழுக்க நேற்று இரவு 12 மணியில் இருந்து இந்த ஊரடங்கு அமலில் இருக்கிறது. தமிழகத்திலும் கூட 144 அமலில் உள்ளது. இத்தனை விஷயங்கள் இருக்கும் நிலையில் தமிழகத்தில் நேற்று +2 தேர்வுகள் நடத்தப்பட்டது. 144க்கும் இடையில் நேற்றுக்கு 12 தேர்வு எழுத மாணவர்கள் சென்றனர்.
ஸ்டாலின் என்ன சொன்னார்
ஸ்டாலின் எதிர்த்தார்
தமிழகத்தில் கொரோனா காரணமாக தொடர்ந்து +2 தேர்வை எதிர்த்து வந்தவர் திமுக தலைவர் ஸ்டாலின்தான். தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று முதலில் கூறியது ஸ்டாலின்தான். 11&12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்து கொரோனா அச்சுறுத்தலை அதிமுக அரசு அலட்சியப்படுத்துகிறதா மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் தேர்வுகள் ரத்தாகியுள்ள நிலையில்- மாணவர்களின் பாதுகாப்புடன் விபரீத விளையாட்டு நடத்தாமல்,தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் அரசு கேட்கவில்லை
அரசு கொஞ்சம் கூட கேட்கவேயில்லை
ஆனால் இதை தமிழக அரசு கொஞ்சம் கூட காதில் வாங்கிக் கொள்ளவில்லை. வீம்பாக தேர்வு நடத்தியே தீருவோம் என்று கூறியது. கண்துடைப்பு சம்பவம் போல வெறும் 30 நிமிடம் மட்டும் தேர்வு நேரத்தை தள்ளி வைத்தது. 10 மணிக்கு பதிலாக 10.30க்கு தேர்வு தொடங்கும் என்று கூறியது. அதோடு நேற்று தேர்வும் திட்டமிட்டபடி நடத்தப்பட்டது. பேருந்துகள் இல்லை, ஆட்டோ, டாக்சிகள் இல்லை என்றாலும் கூட தேர்வு நடந்தது.
மாணவர்கள்
மாணவர்கள் தேர்வு எழுதவில்லை
ஆனால் இந்த தேர்வை எழுத நேற்று 68-70 ஆயிரம் மாணவர்கள் வரவில்லை. முதலில் 36 ஆயிரம் பேர்தான் எழுதவில்லை என்று கூறப்பட்டது. தற்போது 70 ஆயிரம் பேர் வரை தேர்வை எழுதவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பேருந்து இல்லாததாலும், கொரோனா அச்சம் காரணமாகவும் பலர் தேர்வை எழுதவில்லை. முக்கியமாக சென்னை கோவையில்தான் பலர் இந்த தேர்வை எழுதவில்லை.
மீண்டும் தேதி
மறு தேதி அறிவிப்பு
இந்த நிலையில் இவர்களுக்காக தற்போது மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு 24.3.2020 அன்று +2 தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் வேறொரு நாளில் தனியாக தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. முன்பே செய்திருக்க வேண்டிய வேலையை தற்போது அரசு தாமதமாக செய்துள்ளது.
விளையாட்டு
இதில் என்ன விளையாட்டு
தமிழக அரசு முன்பே இதை செய்து இருந்தால் மாணவர்கள் பலர் நேற்று போய் தேர்வு எழுதி இருக்க வேண்டிய அவசியம் இருந்து இருக்காது. கஷ்டப்பட்டு கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் சென்னையிலும், காஞ்சிபுரத்திலும் மாணவர்கள் சென்று தேர்வு எழுதி இருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. அரசு கொஞ்சம் முன் யோசனையோடு செயல்பட்டு இருந்தால் மாணவர்கள் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திருக்க வேண்டியது இல்லை.
ஸ்டாலின்
அரசியல் வீம்பு வேண்டாம்
தேர்வு போனால் திரும்ப வரும், ஆனால் உயிர் போனால் திரும்ப வருமா?. திமுக தலைவர் ஸ்டாலின் சொன்னார் என்ற ஒரே காரணத்திற்காக தேர்வை ஒத்திவைக்காமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம். நாடு முழுக்க முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இப்போதும் கூட தமிழக அரசு +2 தேர்வை ஒத்திவைப்பதாக அறிவிக்கவில்லை. இன்னும் தேர்வை ஒத்திவைப்பது தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிடவில்லைhttps://t.co/BnWc0P1HKj
முன்னாள் நிதி அமைச்சரும், சிறந்த பொருளாதார நிபுணருமான, பா. சிதம்பரம் அரசுக்கு வழங்கியுள்ள 10 ஆலோசனைகள்:-
முன்னாள் நிதி அமைச்சரும், சிறந்த பொருளாதார நிபுணருமான, பா. சிதம்பரம் அரசுக்கு வழங்கியுள்ள 10 ஆலோசனைகள்:-
நாடு முழுதும் 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு செய்ய வேண்டிய 10 கடமைகள் இதோ:
1. பிரதமர் கிசான் திட்டத்தில் தரும் உதவித் தொகையை ரூ 12,000 ஆக உயர்த்தி உடன் வழங்க வேண்டும்.
2. குத்தகை விவசாயிகளின் பட்டியல்களை மாநில அரசுகளிடமிருந்து பெற்று ஒவ்வொரு குத்தகை விவசாயின் குடும்பத்திற்கும் ரூ 12,000 உடன் வழங்க வேண்டும்.
3. மகாத்மா காந்தி வேலைத் திட்டத்தில் பதிவு செய்துள்ள ஒவ்வொருவருக்கும்
ரூ 3,000 உடன் வழங்க வேண்டும்.
4. ஜன் தன் திட்டம் அதனை ஒத்த முந்தைய திட்டங்களில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகள் (நகர்ப் புற வங்கிக் கிளைகளில் மட்டும்) ஒவ்வொன்றுக்கும் ரூ 3,000 உடன் வழங்க வேண்டும்.
5. ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 10 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக உடன் வழங்க வேண்டும்.
6. ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள தொழில் உரிமையாளர் அனைவரும் தற்போதுள்ள வேலைகளயோ ஊதியத்தையோ குறைக்கக் கூடாது என்று கட்டளையிட்டு அவர்கள் தருகின்ற ஊதியத்தை அரசு 30 நாட்களுக்குள் ஈடு செய்ய வேண்டும்.
7. மேற்கூறிய இனங்களில் அடங்காதவர்களுக்கு, ஒவ்வொரு வார்டிலும் ஒன்றியத்திலும் பதிவு அலுவலகம் திறந்து அத்தகைய ஏழைகளைப் பதிவு செய்து ஒவ்வொருவருக்கும் வங்கிக் கணக்கு திறந்து அக்கணக்கில் ரூ 3,000 உடன் வழங்க வேண்டும்.
8. எல்லா வகையான வரிகளையும் கட்டுவதற்கு இறுதி நாளை 30-6-2020 க்கு ஒத்தி வைக்க வேண்டும்.
9. வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய மாத தவணை (EMI) இறுதி நாட்களை 30-6-2020க்கு ஒத்தி வைக்க வேண்டும்.
10. மக்களின் அன்றாடத் தேவைக்கு பயன்படும் பொருள்கள், சேவைகள் மீது உள்ள ஜிஎஸ்டி வரி விகிதத்தை 5% உடன் குறைக்க வேண்டும்.
என்று கூறி உள்ளார் அவர்
வகுப்புரிமை போராட்டம் ; பேராசிரியர் கா. அன்பழகன்
வகுப்புரிமை போராட்டம் ; பேராசிரியர் கா. அன்பழகன்
தகுதி திறமை என்று கூறும்
துக்ளக் அறிவாளிகளே !!!
எது #தகுதி ??
எது #திறமை ??
வாள் வீசுகின்றார்!!
எங்கள் #இனமான_பேராசிரியர்
#சமூக நீதியின் தடைக்கல் , மற்றும் அவசியம்
...................................
பிராமணர்கள் மட்டுமே படிக்கலாம் வேதம் ஓதும் குருவாகலாம்
அது அவர்களின் கடமை.
மற்றவர்கள் படிப்பது பாவம்
படித்தால் நாக்கை அறு
கேட்டால் காதில்
ஈயத்தைக் காய்ச்சி ஊற்று
தவம் செய்தால் தலையை வெட்டு இப்படிப்பட்ட வர்ணாசிரம நீதி தான் நாட்டில் இருந்தது.
இப்படி ஒரு அளவுகோலை தீர்மானித்து விட்டு தகுதியைப் பற்றி தீர்மானிப்பது என்பது எப்படி நியாயமாகும்
ஒரு சிறு கதை #மூன்று குடும்பங்களின் ஒப்பீடு
...,.........................
#உயர்சாதி :👇
#பார்ப்பன மாணவர்களுக்கு கிடைத்துள்ள வசதி சூழ்நிலை மற்ற
பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைப்பது இல்லை
#அட்வகேட் ஆனந்தாச்சாரியின் மூன்றாவது மகன் சந்தானம் இன்டர்மீடியட் வகுப்பு படிக்கிறான்
அவனது பெரியண்ணா
பட்டாபிராமன் டாக்டர்
தமக்கை சீதாலட்சுமி பிஏ பட்டதாரி
சின்ன அண்ணா ரங்கசாமி என்ஜினியரிங் கல்லூரியில் படிக்கிறான்
#உயர்சாதி ஏழை:
வக்கீல் குமாஸ்தா கோவிந்தசாமி பிள்ளை இரண்டாவது மகன் சண்முகம் இன்டர்மீடியட் வகுப்பில் படிக்கிறான்
அவன் அண்ணன் ஆறுமுகம் எஸ்எஸ்எல்சி பாஸ் செய்துவிட்டு
தபால் அலுவலகத்தில்
கிளார்க் வேலையில் உள்ளான்
அவன் தங்கை சரஸ்வதியோ
நான்காம் வகுப்போடு
பள்ளியை நிறுத்திவிட்டு
மணபருவத்தை எட்டி
வீட்டில் உள்ளார்
இன்னும் சின்ன தம்பியும் தங்கையும் வேறு இருக்கிறார்கள்.
#பிற்படுத்தப்பட்டோர்
#கூலிவேலை செய்து வயிறு கழுவும் குப்பன் மகன் ரத்தினம்
இண்டர்மீடியட் வகுப்பில் படிக்கிறான்
(ஆச்சரியமாக இருக்கும்)
அவனது தாய் புல் அறுக்கப்போவதும் தமக்கை வக்கீல் வீட்டில்
கூலி வேலை செய்வதும்
தம்பியும் தங்கையும் ஒரு வேளை உணவுக்கே வாடி வதங்கி கிடப்பதும் அவன் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கை
தகப்பன் எப்பாடுபட்டாவது
தன்னைப் படிக்க வைக்க முன் வந்த காரணத்தால் அரசாங்க ஸ்காலர்ஷிப் உதவியுடன் தட்டுத் தடுமாறி இண்டர்மீடியட்
வகுப்பில் படித்து வருகிறான் ரத்தினம்
இந்த மூன்று சமூகங்களை சேர்ந்த மூவரும் ஒரே வகுப்பில்
ஒரே கல்லூரியில்
படித்துக் கொண்டு உள்ளனர்.
#சமூக நீதியின் #அவசியம்
இவர்களுக்கு இடையே உள்ள
வேறுபாட்டை ஒரு கணம் உங்கள் மனக்கண் முன் கொண்டு வாருங்கள்
அட்வகேட் மகன் சந்தானம்
10 மணிக்கு ஆஸ்டின் காரில் புறப்பட்டு
கல்லூரிக்கு போகும்முன்
தந்தையிடம் தலையை சொரிந்து காபிக்கு காசு வாங்கிக்கொண்டு செல்கிறான்.
9.30மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி பேருந்துக்கு காத்திருக்கும் சண்முகதிற்கு ஒருநாள்
சந்தானம் காரில் இடம்
கிடைப்பது உண்டு
ஆனால் ஒவ்வொருநாளும் கார் நிற்கும் என்று எதிர்பார்த்து சண்முகம் ஏமாறவும் இதுவே காரணமாகவும் இருக்கும்
குப்பன் மகன் ரத்தினம்
வயல்வெளி குறுக்கு பாதை
வீட்டிலேயே அரை வயிறு கால் வயிறு மட்டும் உணவு
அத்துடன் அவிழ்த்து வைத்திருந்த ஆடையை உடுத்திக் கொண்டு
காலை 9 மணிக்கு புறப்பட்டு
நான்கு மையில் நடந்து
கல்லூரியை அடைகிறான்
வக்கீல் மகன் இடைவேளையில் உண்பது விருந்து போல இருக்கும்
குமஸ்தா மகன் வடை ஒரு காப்பி ஆறுதல் அடைவான்
கூலிக்காரன் மகன்
புளிய மரத்தடியிலே களைப்பை
போக்கி கொள்வான்
பசிக்கும்போது தம்பி தங்கையை எண்ணி அதை மறப்பான்
மாலையில் வக்கீல் மகன்
பீச் ரோட்டில் காற்று வாங்கி
வீடு திரும்புவான்
காப்பி அருந்தி சிறிது ஓய்வாக ரேடியோவில் பாடல் கேட்பான்
மணி 7 ஆனதும் மின்சார விளக்கு விசிறி உடன் படிக்க உட்காருவான்
கணக்கில் சந்தேகம் என்றால்
சின்ன அண்ணாவை கேட்பான்
ஆங்கிலம் என்றால்
அக்காவிடம் கேட்பான்
பொது அரசியல் தெரிந்து கொள்ள அப்பாவிடம் பேசுவான்
தலைவலி படிக்கும்போது ஏற்பட்டால் டாக்டர் அண்ணாவை கூப்பிடுவான்.
கல்லூரியில் முதல்வரை தெரிந்து இருப்பதும்
சமஸ்கிருதத்தில் படிக்காமலே
மார்க் வாங்குவதும் இவனை படிப்பிலே உற்சாகமூட்டும் கருவியாய் இருக்கும்
இரவு10 ஆனாதும் சாப்பிட்டு
படுத்து விடுவான்
குமஸ்தாவின் மகனோ
வீடு திரும்பியதும்
காபிக்கு வழியில்லையே என்று
எண்ணி உணவுக்கு காத்திருப்பதும்
அரிக்கன்லைட்டை
துடைத்து ஏற்றி வைத்துவிட்டு உட்காருவான்
பக்கத்தில் தம்பியும் தங்கையும்
சத்தம் போட ஆரம்பித்தால் கோபப்படுவதும்
சந்தேகம் ஏற்பட்டால் யாரையும் கேட்கவழியில்லையே என திகைப்பான்.
தேவைப்படும் எல்லா புத்தகங்களும் கூட வாங்க முடியாத நிலையில்
நாம் ஏன் குடும்பத்திற்கும் பாரம்
படிப்பை விட்டுவிட்டு ஏதேனும் வேலைக்கு போய்விடலாம் என்று எண்ணுவதும் நாம் அறிந்ததுதான்
கூலிக்காரன் மகன் இருட்டும் போது குடிசை வருவான்.
குடும்பத்தார் படும் வேதனை கண்டு துயரம் நெஞ்சை அடைக்கும்
இரவல் புத்தகங்களை
அகல் விளக்கு எரியும்வரையில் புரட்டுவான்
அப்புறம் தெருவிளக்கில்
படிக்க துவங்குவான்
தலையணை இன்றி
உடுக்கப் போதுமான உடையில்லாமல் பசி நீங்க போதுமான உணவில்லாமல் குமுறல் அடங்காத மனத்துடன்
தான் படிப்பதே தன் குடும்பத்திற்கு செய்யும் கொடுமை
இப்படி ஏக்கப் பெருமூச்சோடு
கண்ணீர் விடுவதுமே
அவன் படிப்பதற்கு உள்ள சூழ்நிலை என்பதை மனம் உள்ள
எல்லோரும் அறிவோம்.
வக்கீல் மகனுக்கோ
படிப்பு உல்லாச ஓடம்
குமாஸ்தாவின் மகனுக்கு
படிப்பு ஒரு பாரவண்டி
கூலிக்காரன் மகனுக்கு
படிப்பு ஒரு தலைச்சுமை பாரங்கல்.
இந்நிலையில் உள்ள வாழ்வியல் முறையில் படிக்கின்ற மூவரும்
தேர்வில் தேர்ச்சி பெற்று
வாங்கும் மதிப்பெண்
உண்மையான தகுதியைக் காட்டும் என்று யார்தான் கூறமுடியும்!? முடியுமா??
சமூகநீதி எங்களுக்கு வேண்டும் #அனைவர்க்கும்_அனைத்தும் என்பதுதான் சமூகநீதி
பசி ஏப்பக்காரர்களை
பந்தியில் முதலில் அமரவைத்து
அவர் பசி போக்கிடவே
முன்னுரிமை தரவேண்டும்
புளிஏப்பக்காரர்களை
சற்றுப் பொறுத்து அடுத்த பந்தியில்
அமர வைக்கப்படவேண்டும் என்று உணர்த்திடும்
தத்துவம்தான்
வகுப்புரிமை
சமூகநீதி
இட ஒதுக்கீடு.
திமுக சட்டமன்ற உறுப்பினர். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஸ்டாலின் உத்தரவு
திமுக தலைவர் ஸ்டாலின் :
#CoronaVirus தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் திமுக MPs & MLAs அனைவரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, தங்களது நாடாளுமன்ற / சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேவையான நிதி ஒதுக்கீடு செய்திடவும்.
#CoronaVirus தடுப்பு நடவடிக்கைகளுக்கு இப்போது அதிமுக அரசு ஒதுக்கியுள்ள 3280 கோடி ரூபாய் நிதியுதவி போதாது என்பதால் மத்திய அரசிடம் அதிக நிதி கேட்டுப் பெற்றாவது நான் முன்வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும்.
Tuesday, March 24, 2020
அதிமுகவுக்கு திமுக அளித்த 9 அறிவுரை - கொரானா ஆட்டம்
திமுக தலைவர் ஸ்டாலின் அரசுக்கு அளித்த 9 #அடவைஸ்
சரியான அட்வைஸ் தந்த ஸ்டாலின்.. லேட்டாக முடிவு எடுத்த முதல்வர்
உலகம் முழுக்க போரும், பொருளாதார சீர்குலைவும் ஒரு நாட்டின் தலைவரின் தலைமைப்பண்பை தீர்மானிக்கும். இக்கட்டான சூழ்நிலையில் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதுதான் தலைமைப்பண்பை தீர்மானிக்கும். அதில் தற்போது கொரோனா வைரஸை சேர்த்துக் கொள்ளலாம்.
ஆம் கொரோனா வைரஸை எப்படி அரசியல் தலைவர்கள், பிரதமர்கள், மாநில முதல்வர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்துதான் அவர்களின் தலைமைப்பண்பு தீர்மானிக்கப்படும். அவர்களின் ஆட்சி அதிகாரம், திறமை முடிவு செய்யப்படும்.
திமுக தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தன்னுடைய திறமையை காட்டி உள்ளார். ஒரு எதிர்க்கட்சியாக அரசை எப்படி எல்லாம் வழி நடத்த முடியுமோ அப்படி எல்லாம் தமிழக அரசை திமுக தலைவர் ஸ்டாலின் வழி நடத்தி வருகிறார்.
ஸ்டாலின் பேசும் நிலவரம்
ஸ்டாலின் நிலவரத்தை பேசுகிறார்
இதற்கு நிறைய உதாரணங்களை சொல்லாம்.
நடவடிக்கை -1
#முதலில் தமிழகத்தில் லாக் டவுன் கொண்டு வர வேண்டும் என்று கூறியது #திமுகதான்.
நடவடிக்கை-2
சட்டமன்ற கூட்டத் தொடரை நிறுத்திவிட்டு, எம்எல்ஏக்களை மக்கள் பணி செய்ய அனுப்ப வேண்டும் என்று கூறியது #ஸ்டாலின்தான்.
நடவடிக்கை-3
மக்களை வீட்டிற்குள் அடைக்க வேண்டும், அதே சமயம் அவர்களுக்கான உதவிகளை செய்ய வேண்டும் என்றதும் #திமுகதான்.
நடவடிக்கை-4
மக்களுக்கான #பொருளாதார தேவை குறித்து பேசியது #ஸ்டாலின்தான்.
நடவடிக்கை-5
மிக முக்கியமான மருத்துவமனை நிலை, அதை தயார் செய்வது குறித்தும் திமுக தலைவர் #ஸ்டாலின்தான் முதல் ஆளாக பேசினார்.
நடவடிக்கை-6
கோரிக்கை
ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்
கொரோனா, 144 தடை ஆகிய சூழலில் வெளியூர்வாசிகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்காமல் மக்களை சாலையில் நிறுத்தியிருக்கிறது அரசு. பேருந்துகளைக் குறைத்தால் எப்படி ஊருக்குச் செல்வார்கள் என்கிற எண்ணம் கூடவா இல்லை? உடனே பேருந்துகளை அதிகரித்து, மக்களுக்கு இலவச பயணத்தை அனுமதிக்க வேண்டும், என்று கூறினார். கூட்டம் அதிகம் ஆனால் கொரோனா பரவும் என்பதால் அப்படி கூறினார்.
நடவடிக்கை-7
சம்பளம் குறித்து பேசினார்
அதேபோல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மாத சம்பளம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஒரு மாதத் தேவைக்கான #நிதியுதவி, ஏழைகளுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். தனிமைப்படுத்துதலை பொதுமக்கள் கவனமும், அக்கறையும் கொண்டு கடைப்பிடிக்க வேண்டும், என்று கூறினார். ஊழியர்கள் மாத #சம்பளம் குறித்து பேசிய முதல் கட்சி #திமுகதான்.
நடவடிக்கை-8
தேர்வுகள் எப்படி
மேலும், 11&12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்து கொரோனா அச்சுறுத்தலை அதிமுக அரசு அலட்சியப்படுத்துகிறதா?மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் தேர்வுகள் ரத்தாகியுள்ள நிலையில்- மாணவர்களின் பாதுகாப்புடன் விபரீத விளையாட்டு நடத்தாமல்,தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும், என்று மாணவர்களின் நலன் குறித்தும் #திமுகதான் பேசியது. அதிமுக இன்னும் இதில் பிடிவாதமாக இருக்கிறது.
நடவடிக்கை-9
தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் நடைபாதைவாசிகள் - இரவலர் ஆகியோருக்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், சட்டமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என்றும் #ஸ்டாலின்தான் வலியுறுத்தினார்.
திமுக தற்போது நல்ல எதிர்க்கட்சியாக சரியான ஆலோசனைகளை சரியான நேரத்தில் வழங்கி வருகிறது.
அதிமுகவும் திமுகவின் அட்வைஸ் கேட்டு முடிவுகளை எடுத்து வருகிறது.
Friday, March 20, 2020
திமுக தலைவர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் உரை ( கொரானா)
*கொரோனோ* மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து *எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சட்டமன்ற உரை* .. 👇🏻
மக்கள் முதல்வரின் சரியான அணுகுமுறை 👌🏾💓💓
கடையை மூடிவிட்டால் நமது கடமை முடிந்து என்று இருக்கும் அடிமை எடப்பாடி அவர்களுக்கு சரியான அறிவுரை
மக்கள் முதல்வரின் சரியான அணுகுமுறை 👌🏾💓💓
Tuesday, March 17, 2020
திராவிடத்தால் வாழ்ந்தோம் - ஜெயரஞ்சன்
50 வருஷமா இங்க ஒன்னும் செய்யலன்னு சொல்றவன எதுல கட்டி அடிக்குறது?
குஜராத் மாடலின் லட்சணம்
1974லேயே அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் கொடுத்தது கலைஞர் , அரசு போக்குவரத்துக் கழகம் ஆரமித்தது திமுக அரசு.இதெல்லாம் இந்தியா ல எங்கேயும் இல்ல,
திராவிடத்தால்_வாழ்ந்தோம்_ஜெயரஞ்சன்
குஜராத் மாடலின் லட்சணம்
1974லேயே அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் கொடுத்தது கலைஞர் , அரசு போக்குவரத்துக் கழகம் ஆரமித்தது திமுக அரசு.இதெல்லாம் இந்தியா ல எங்கேயும் இல்ல,
திராவிடத்தால்_வாழ்ந்தோம்_ஜெயரஞ்சன்
பத்தாண்டுகளாக தமிழ் மக்களை வஞ்சித்த அதிமுக அரசு.
பத்தாண்டுகளாக தமிழ் மக்களை வஞ்சித்த அதிமுக அரசு.
தேர்தல் என்றவுடன் மக்கள் நினைவுக்கு வருகிறார்கள் போல 😡😡😡😡
https://tamil.oneindia.com/news/2010/09/08/tamilnadu-school-education-tamil-medium-govt-job.htmlhttps://tamil.oneindia.com/news/2010/09/08/tamilnadu-school-education-tamil-medium-govt-job.html
Monday, March 16, 2020
திமுக தலைவர் ஸ்டாலின் சாதாரணமாக திமுகவின் தலைமை பொறுப்புக்கு வந்து விடவில்லை
#கழகத்தலைவர் பாசமிகு #தளபதியார் அவர்கள் அவ்வளவு எளிதில் #தலைமைக்கு வரவில்லை. அவர் கடந்து வந்த பாதை இதோ உங்கள் பார்வைக்கு:
#பிறப்பு :
1953ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி கருணாநிதி – தயாளு அம்மாளுக்கு 3வது மகனாக பிறந்தார்.
#ரஷ்ய அதிபர் ‘#ஜோசப் ஸ்டாலின்’ நினைவாக தனது மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் வைத்தார் தலைவர் #கலைஞர் கருணாநிதி அவர்கள்.
#கல்விப் பருவம்:
சென்னை சர்ச் பார்க் பள்ளியில் கழகத்தலைவர் ஸ்டாலின் அவர்களை சேர்ப்பதற்கு விண்ணப்பித்தபோது, அவரின் பெயருக்காகவே விண்ணப்பம் மறுக்கப்பட்டது.
இதனை தெரிவித்தபோது, மாற்ற வேண்டியது பள்ளியை தான் பெயரை அல்ல என்று கூறினார் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.
பின்னர் கழகத்தலைவர் ஸ்டாலின் அவர்கள் கிறிஸ்துவ மேனிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
#அரசியல் பிரவேசம் :
1967ம் ஆண்டு, 14 வயதிலேயே அரசியலில் தந்தையுடன் இணைந்து கால் பதித்தார் கழகத்தலைவர் ஸ்டாலின் அவர்கள். அப்போது திமுக முதல் முறையாக ஆட்சி அமைத்திருந்தது.
14 வயதில் கழகத்தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள்
1972ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற செங்கற்பட்டு மாவட்ட தி.முக.வின் சார்பாகத் தோழர்களை அழைத்துக்கொண்டு தொடர் ஓட்டமாக வந்து அண்ணா ஜோதியை தலைவர் கலைஞர் அவர்களிடம் வழங்கினார்.
1973ம் ஆண்டு திமுக-வின் பொதுக்குழு உறுப்பினரானார்.
14 வயதில் அரசியல் களத்தில் கழகத்தலைவர் ஸ்டாலின் அவர்கள்
1973இல் புதுக்கோட்டை மாவட்டக் கழகத் தேர்தலை மு.க.ஸ்டாலின் ஆணையாளராகச் சென்று முதன்முறையாக நடத்தினார். அதுபோன்றே செங்கை மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத் தேர்தலையும், ஆணையாளராக இருந்து நடத்தி வைத்தார்.
#அவசரக் காலச் சட்டத்திற்கு பிறகு:
1975ம் ஆண்டு அவசரக் காலச் சட்டத்தின்போது உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் (மிசா) கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
1984ம் ஆண்டு திமுக இளைஞர் அணி செயலாளர் பொறுப்பை வகித்து வந்தார்.
இளைஞர் அண்டி செயலாளராக இருந்தபோது, 1984ம் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் தோல்வியை தழுவினார்.
பின்னர் அதே தொகுதியில், 1989ம் ஆண்டு தேர்தலில் வெற்றியடைந்து சட்டப்பேரவைக்குள் கால் பதித்தார்.
#ராஜிவ் காந்தி கொலைக்கு பின் ஆட்சி
கலைப்பு:
1991ம் ஆண்டு ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டார். அப்போது இருந்த திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.
5 ஆண்டுகளுக்கு பின்பு, 1996 தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மீண்டும் வெற்றியை தழுவினார் ஸ்டாலின்.
மு.க. ஸ்டாலின் மேயர் பதவியில்
பின்பு, உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சிக்கு நேரடி மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை மாநகராட்சிக்கு நேரடியாக தேர்வான முதல் மேயர் என்ற பெருமை இவருக்கே உரியது.
#மீண்டும் சட்டப்பேரவைக்குள் ஸ்டாலின்:
2001 தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியிலேயே, மூன்றாவது முறையாக வெற்றிப்பெற்று சட்டப்பேரவைக்குத் தேர்வானார். அதே ஆண்டு மீண்டும் சென்னை மேயர் பதவி வகித்தார்.
மேயர் பதவியில் ஸ்டாலின்
ஆனால், 2002ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு கொண்டுவந்த சட்டத்தால் மேயர் பதவியலிருந்து அவர் விலகும் நிலை ஏற்பட்டது. இருப்பினும், எம்எல்ஏவாகத் தொடர்ந்து இருந்தார்.
திமுக பொருளாளர் மற்றும் துணை
#முதல்வர் பதவி ஏற்பு:
2006 பேரவைத் தேர்தலில் அதே தொகுதியில் 4ஆவது முறையாக வெற்றியடைந்த ஸ்டாலின், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
2008ஆம் ஆண்டு திமுக பொருளாளராக பொறுப்பேற்றார்.
2009ஆம் ஆண்டு துணை முதலமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளின் சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார் ஸ்டாலின்.
#செயல் தலைவர் ஆனார் ஸ்டாலின் :
2017ம் ஆண்டு ஜனவரி முதல் திமுக தலைவராக இருந்த மு.க. கருணாநிதியின் உடல்நலம் பாதிப்படைந்தது. அப்போது கருணாநிதியால் கட்சி வேலைகளில் முழு வீச்சில் ஈடுபட முடியவில்லை.
அப்போது திமுக – வின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார் ஸ்டாலின்.
#திமுக – வின் புதிய 2ம் தலைவர்
ஸ்டாலின் அவர்கள்:
முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு, கட்சியின் தலைவர் பதவிக்கு மு.க. ஸ்டாலின் மனு தாக்கல் செய்தால்.
திமுக தலைவர் பதவிக்கு எவ்வித போட்டியுமின்றி நேரடியாக தேர்வானார்.
இன்று திமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் கூட்டப்பட்டு அங்கு கட்சியின் புதிய தலைவர் ஸ்டாலின் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.
Subscribe to:
Posts (Atom)