#நான்_யார் ?
1938ல் எந்த ஆசிரியரால் அறையப்பட்டேனோ அதே ஆசிரியர்
1973ல் என்னை வைத்து கட்டிடம் திறக்க வைத்தவன்,
1950களில்
எம்ஜிஆர்,சிவாஜி உள்ளிட்டோருக்கு
கதாநாயகன் வாய்ப்பு வாங்கி கொடுத்தவன்,
1957 முதல் உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்றவன்.
1971ல் 184 தொகுதிளில் கட்சியை வெற்றிபெறச் செய்தவன்,
விடுதலைநாளில் மாநில முதல்வர்கள் தேசிய கொடி ஏற்றும் உரிமையை வாங்கித் தந்தவன்,
எமெர்ஜன்சியை துணிவோடு எதிர்த்து நின்றவன்,
1977ல் தோற்ற இந்திராகாந்திக்கு 1980ல் மீண்டும் பிரதமராக உதவியவன்,
பத்து வருடங்களுக்கு எம்ஜிஆர் கண்ணில் விரலை விட்டு ஆட்டியவன்,
கட்சிக்கு அலுவலகம் தரமாட்டேன் என்று சொன்னவருக்கு சவாலாக
அண்ணா அறிவாலயம் கட்டியவன்.
90ல் ஒரு எம்பி கூட இல்லாமல் காவிரி நடுவர் மன்றம் உருவாக்கியவன்.
1996லேயே இந்தியாவிலேயே மாநிலங்களில் முதன் முதலாக ஐடி கொள்கையை உருவாக்கியவன்.
2004ல் தமிழ்மொழியை செம்மொழியாக்கி
2010 உலக செம்மொழி மாநாடு நடத்தியவன்,
ஒருமுறை கூட தேர்தலில் தோற்காதவன்,
என்னை எதிர்த்த அனைத்து அரசியல் எதிரிகளுக்குமே
இரங்கற்பா எழுதியவன்.
எனது விருப்பமான, கடற்கரையில் அண்ணனின் அருகில் அடக்கம் செய்ய இடம் கொடுக்காத அரசை எதிர்த்து இந்த இட ஒதுக்கீட்டிலும் வெற்றிப் பெற்றவன்.
என்னை பற்றி எனக்கு பின்பும் எனது சாதனைகளை பேச வைத்து உங்களோடு வாழ்பவன்.
இவண்,
No comments:
Post a Comment