Tuesday, March 31, 2020

70 பேர் கொண்ட மருத்துவப் படையை களமிறக்கிய திமுக 👇👇 கொரான பேரிடர் ரை சமாளிக்க அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் திமுக

70 பேர் கொண்ட மருத்துவப் படையை களமிறக்கிய திமுக 👇👇

 திமுக மருத்துவர் அணி செயலாளர் பூங்கோதை ஆலடி அருணாவை நாம் தொடர்பு கொண்டு பேசிய போது, '' 

எங்கள் தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியதன் பேரில் நாங்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளோம். இன்று கூட திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து டயாலிஸிஸ் செய்து வரும் ஒருவர் என்னை அழைத்து, டயாலிஸிஸ் மையத்திற்கு சென்று வர ஆம்புலன்ஸ் கிடைப்பது அரிதாக உள்ளது, ஆகையால் தமக்கு மாற்று உதவி வேண்டும் எனக் கேட்டார். உடனடியாக எங்கள் திருவள்ளூர் மாவட்ட மருத்துவர் அணி நிர்வாகியை தொடர்பு கொண்டு தகவலை கூறினேன், அவர் அந்த நபர் கூறிய தகவலை உறுதிபடுத்திய பின்பு ஆட்டோவில் செல்வதற்காக ரூ.6,000 உதவித் தொகை வழங்கியுள்ளோம்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், ''இதுமட்டுமல்லாமல் எங்கள் குழுவில் மகப்பேறு மருத்துவர்கள் உள்ளதால் கர்ப்பிணி பெண்கள் பலரும் அலைபேசி மூலம் அழைத்து ஆலோசனைகள் கேட்கின்றனர். 

மேலும், யாராவது காய்ச்சல் உள்ளிட்ட சில பிரச்சனைகள் இருப்பதாக கூறினால் நாங்களே அவர்களை அரசு மருத்துவமனைக்கு சென்று உடனடியாக சோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்'' என்றார்.

கொரோனா சிகிச்சை வார்டாக பயன்படுத்திக்கொள்ளுமாறு கலைஞர் அரங்கை இன்று காலை மு.க.ஸ்டாலின் வழங்கிய நிலையில், அடுத்தகட்டமாக மருத்துவர் அணியையும் களமிறக்கியுள்ளார்

Sunday, March 29, 2020

மாநில சுயாட்சி முக்கியத்துவத்தை இப்போது உணர்ந்து இருப்பார்கள் வட நாட்டு அறிவு மேதைகள்

மாநில சுயாட்சி முக்கியத்துவத்தை இப்போது உணர்ந்து இருப்பார்கள் வட நாட்டு அறிவு மேதைகள் 

நன்றி Shine Kumar 

#கண்ணுக்கே #தெரியாத #கிருமியை #எதிர்த்து #போராடும் #மாநில #சுயாட்சி #எனும் #ஒற்றை #ஆயுதம்..!!

உலகத்தையே ஆட்டிப்படைத்து , இன்னொரு நாட்டையே தன் படைபலத்தால் குறைந்த நேரத்தில் கபளீகரம் செய்யலாம் என கர்வத்துடன் சுற்றத்திரியும் வல்லரசு நாடுகளையே ஆட்டிப்படைக்கும் ஒரு கிருமியை அழிக்க வழி தெரியாமல் தத்தளிப்பதற்கு பின்னால் இருப்பது அறிவியலின் தோல்வி அல்ல , அது ஒரு நாட்டின் சித்தாந்த்ததின் தோல்வி.

ஆம் அது தான் ஒரு நாட்டில் ஒரே தலைமையின் கீழான அதிகார குவிப்பு ( உதா: ஒரே நாடு ,ஒரே மொழி , ஒரே அதிகாரம் -என  இந்தியாவில் ஆக்க துடிக்கும் ஆட்சியாளர்கள்)

இன்று இந்தியா முழுக்க கொரோனாவிற்கு எதிராக மாநில தலைவர்கள்தான் தீவிரமாக போராடி வருகிறார்கள். அதற்கு சிறந்த உதாரணமாக ஒடிசா, தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிராவை கூறலாம்.

பினராயி விஜயனால் கேரளாவிலும் , மம்தாவால் மேற்கு வங்கத்திலும் ,பட்நாயக்கால் ஒடிசாவிலும் , உத்தவ் தாக்கரேவால் மகாராஷ்டிராவிலும் தன்னிச்சையான முடிவெடுத்து கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்க முடிகிறதென்றால் , அந்த ஒற்றை ஆயுதத்தின் பெயர் " #மாநில_சுயாட்சி"

மாநில சுயாட்சி இல்லையென்றால், மாநில தலைவர்கள் இல்லையென்றால் இந்த கொரோனா போராட்டத்தில் எப்போதோ இந்தியா தோல்வி அடைந்து இருக்கும். 

அதிகாரம் டெல்லியில் மட்டும் குவிந்து இருந்தால் இது சாத்தியம் ஆகி இருக்காது. டெல்லி மட்டும்தான் முடிவு எடுக்கும் என்ற நிலை இருந்து இருந்தால் இந்தியா இதில் தோல்வி அடைந்திருக்கும்.

தலைமை அதிகாரம் மாநிலம் முழுக்க பரவி இருக்கிறது. இதனால் மாநில கட்சிகள் சுயமாக முடிவு எடுக்க முடிகிறது. தங்களுக்கு ஏற்ற சட்டங்களை கொண்டு வர முடிகிறது. இதுதான் கொரோனா போரில் நாம் முன்னே நிற்க காரணம். ஒரே நாடு, ஒரே கொள்கை என்ற நிலை இருந்து இருந்தால்.. இந்தியா கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி இருக்கும். பிரதமர் மோடி மட்டும்தான் முடிவை எடுப்பார் என்ற நிலை இருந்தால், நினைத்து பார்க்க முடியாத பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கும்.

சீனா, அமெரிக்கா, இத்தாலி என்று மூன்று நாடுகளிலும் சக்தி எல்லாம் ஒரே தலைவரிடம் குவிந்து இருக்கிறது. இதுதான் அங்கு கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு முக்கிய காரணம். சீனா இதை இப்போதுதான் உணர்ந்து கொண்டு இருக்கிறது. இத்தாலி இன்னும் உணரவில்லை. 

இப்போதுதான் அதிகார பரவலை சீனா முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் இந்தியாவின் மாநில சுயாட்சி உலகம் முழுவதற்கு ஒரு எடுத்துக்கட்டாக மாறி உள்ளது தமிழ்நாடு

ஆம் அதற்கு பின்னால் இருக்கும் சிற்பி 
கலைஞர் எனும் ஒற்றை மந்திரச்சொல்.

பிப்ரவரி 10- 1969...

இன்றைக்கு மிகச் சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்னால், ‘மு.கருணாநிதி என்னும் நான்' என்ற கரகரத்த குரலுடன் சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் சர்தார் உஜ்ஜல் சிங் முன்னால் தமிழக முதல்வராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் கலைஞர்.

1967 ஆம் ஆண்டு அண்ணா ஆட்சிப் பொறுப்பினை ஏற்று தமிழ்நாட்டின் முதல்வர் என்ற பொறுப்பை அவர் வகித்தபோது தனது அனுபவத்திலேயே மத்திய மாநில உறவுகளில் எவ்வளவு சிக்கல் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார்

அண்ணா மறைவுக்குப் பின்னர் 10-02-1969 அன்று முதல்வராகப் பொறுப்பேற்றார் கலைஞர். சாதனை வீரரான கலைஞர் பல அரிய சாதனைகளை நிகழ்த்திக் காட்டினார். அதில் முக்கியமாக அண்ணா வலியுறுத்திய மாநில சுயாட்சிக்கு ஒரு வடிவம் கொடுக்கத் தொடங்கினார்.

அண்ணா முன் மொழிந்த மாநில சுயாட்சிக் கொள்கைக்கு கலைஞர் அவர்கள் வடிவம் கொடுத்தார்.

மாநில சுயாட்சிக்கு ராஜமன்னார் குழு அமைத்து ஆராய்ந்து ,1974 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த கலைஞர் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றினார்.

இன்று சீனா அதிகாரப்பரவலை , சுருங்க சொல்லவேண்டுமென்றால் மாநில சுயாட்சியை கையிலெடுக்கிறது ,

இந்தியாவோ , ஒரே நாடு , ஒரே மொழி என்கிறது ,இந்தியா முழுதும் மாநில சுயாட்சி மாநாடுகளை திமுக முன்னெடுக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது,அவ்வாறு  நடத்தினால், இந்தியாவுக்கே தமிழகம் மீண்டும் வழிகாட்டத் தொடங்கும். மாநில சுயாட்சிக் குரல் நாடு முழுதும் எழுந்தால் மத்திய அரசின் அதிகாரக் குவிப்பும் அடங்கும்!

இந்தொனிசியா தமிழ் சங்கம் தலைவர் தளபதியிடம் கோரிக்கை

நான் யார்?

#நான்_யார் ?

1938ல் எந்த ஆசிரியரால்  அறையப்பட்டேனோ அதே ஆசிரியர் 
1973ல் என்னை வைத்து கட்டிடம் திறக்க வைத்தவன்,

1950களில்
எம்ஜிஆர்,சிவாஜி உள்ளிட்டோருக்கு 
கதாநாயகன் வாய்ப்பு வாங்கி  கொடுத்தவன்,

1957 முதல் உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்றவன்.

1971ல் 184 தொகுதிளில் கட்சியை வெற்றிபெறச் செய்தவன்,

விடுதலைநாளில் மாநில முதல்வர்கள் தேசிய கொடி ஏற்றும் உரிமையை வாங்கித் தந்தவன்,

எமெர்ஜன்சியை துணிவோடு எதிர்த்து நின்றவன்,

1977ல் தோற்ற இந்திராகாந்திக்கு 1980ல் மீண்டும் பிரதமராக உதவியவன்,

பத்து வருடங்களுக்கு எம்ஜிஆர் கண்ணில் விரலை விட்டு ஆட்டியவன்,

கட்சிக்கு அலுவலகம் தரமாட்டேன் என்று சொன்னவருக்கு சவாலாக 
அண்ணா அறிவாலயம் கட்டியவன்.

90ல் ஒரு எம்பி கூட இல்லாமல் காவிரி நடுவர் மன்றம் உருவாக்கியவன்.

1996லேயே இந்தியாவிலேயே மாநிலங்களில்  முதன் முதலாக ஐடி கொள்கையை உருவாக்கியவன்.

2004ல் தமிழ்மொழியை செம்மொழியாக்கி
2010 உலக செம்மொழி மாநாடு நடத்தியவன்,

ஒருமுறை கூட தேர்தலில் தோற்காதவன்,

என்னை எதிர்த்த அனைத்து அரசியல் எதிரிகளுக்குமே
இரங்கற்பா எழுதியவன்.

எனது விருப்பமான, கடற்கரையில் அண்ணனின் அருகில் அடக்கம் செய்ய இடம் கொடுக்காத அரசை எதிர்த்து இந்த இட ஒதுக்கீட்டிலும் வெற்றிப் பெற்றவன்.

என்னை பற்றி எனக்கு பின்பும் எனது சாதனைகளை பேச வைத்து உங்களோடு வாழ்பவன்.

இவண்,

#Kalaingar_Karunanidhi

Saturday, March 28, 2020

அணைக்கட்டு தொகுதி செதுவாலையில் நரிக்குறவர் குடும்பங்கள் கொரானா ஊரடங்கு உத்தரவால் பசியால் இருக்கிறார்கள் என்று அறிந்த உடன் அவர்களுக்கு உதவிய திமுக. எம்எல்ஏ நந்தகுமார்

.அணைக்கட்டு தொகுதி செதுவாலையில் நரிக்குறவர் குடும்பங்கள் கொரானா ஊரடங்கு உத்தரவால் பசியால் இருக்கிறார்கள் என்று அறிந்த உடன் அவர்களுக்கு தலா 10KG அரிசி வழங்கி அந்த மக்களின் பசியை போக்கிய AP நந்தகுமார் MLA

நரிகுறவர்களுக்கு வாக்கு இல்லை என்று தெரிந்தும் சில விளம்பர அரசியல் செய்வோருக்கு மத்தியில் இப்படியும் ஒரு திமுக MLA மாண்புமிகு நந்தகுமார்
ஸ்டிக்கர்ஸ் பழக்கம் இல்லை..!!

திமுக கழகத்_தலைவர்_தளபதியாா் அவர்களின் ஆணைப்படி,1000 ஏழை கூலி தொழிலாளர்கள் குடும்பத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ,முகக்கவசம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

#கழகத்_தலைவர்_தளபதியாா் அவர்களின் ஆணைப்படி,
1000 ஏழை கூலி தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா 2 கிலோ அரிசி,1 கிலோ காய்கறிகள்,முகக்கவசம் மற்றும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

 சேலம் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் அண்ணன் உயர்திரு 
#எஸ்_ஆர்_சிவலிங்கம்_Ex_MLA அவர்கள் தலைமையில்,
சேலம் நாடாளுமன்ற உறுப்பினர்அண்ணன் திரு‌.SR.#பார்த்திபன் MP அவர்களும்
வீரபாண்டி ஒன்றியத்தில்
முருங்கப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட
லவங்கம்ப்பட்டி காலனியில் கூலி தொழிலாளர்கள் குடும்பத்திற்கு  தலா 2 கிலோ அரிசி,1கிலோ காய்கறிகள்,முகக்கவசம் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றை மாவட்ட வீடு,வீடாக சென்று வழங்கினார்கள்.
தினமும் வேலைக்கு சென்றால் தான் உணவு என்ற பரிதாப நிலையில் உள்ள ஏழைக்குடும்பங்களுக்கு வழங்கியதை மக்கள் கண்ணீரோடு நன்றி கூறி பெற்றுக்கொண்டார்கள்.

சொகுசு விடுதியை COVID 19 க்காக மருத்துவமனையாக மாற்றிய #திமுக #சோழிங்கநல்லூர் MLA

சொகுசு விடுதியை COVID 19 க்காக மருத்துவமனையாக மாற்றிய #திமுக #சோழிங்கநல்லூர் MLA

தற்போது திமுக தலைவர் திரு.மு.க ஸ்டாலின் அவர்கள் தங்களது சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் என அனைவரையும் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பிற்காக உதவிட வேண்டும் என்று அன்பு கட்டளையிட அனைத்து திமுகழக உடன்பிறப்புகள் களத்தில் இரங்கியுள்ளனர்.

மற்றும் அனைத்து சட்ட மன்ற பாராளுமன்ற உறுப்பினர்ளும் தங்களது ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளனர்கள். 

இதற்க்கு அடுத்தபடியாக தமிழகத்தின் பெரிய தொகுதிகளில் ஒன்று சோழிங்கநல்லூர் அதன் #திமுக சட்ட மன்ற உறுப்பினர் திரு‌ #அரவிந்த்ரமேஷ் அவர்கள் தனக்கு சொந்தமான 29 குளிருட்டபட்ட தனி தனி அறைகள் கொண்ட தனது சொகுசு விடுதியை கொரோனா வைரசினால் பாதிக்கபட்ட நோயாளிகள் குணமாகும்வரை மருத்துவமனையாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மாநகராட்சி அலுவலரிடம் கடிதம் தந்துள்ளார்.

எதிர்கட்சியாக இருந்தாலும் திமுக என்றும் மக்களுக்கு தோழமை கட்சி தான் என்று நிருபனம் ஆகியுள்ளது! 

தனது தொகுதியை போலவே திரு.அரவிந்த ரமேஷ் அவர்களின் மனதும் பெரியது!

போலியோ ஒழிப்பில் இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த திராவிட தமிழ்நாடு


பேராசிரியர் 1972ம் ஆண்டு சுகாதாரத்துறை அமைச்சர். கருத்தரங்கு ஒன்றிற்காக வெளிநாடு சென்றிருந்தார். 

போலியோ ஒழிப்பு மருந்து இருப்பதை அறிந்து அதை தமிழகத்தில் இறக்குமதி செய்தார். 

சுகாதார பணியாளர்கள் மூலம் எப்படி கொடுப்பது என்று முதல்வர் கலைஞர் விவாதம் நடத்தினார். 

"ஊசி மருந்து இல்லை தானே, மற்ற துறையான ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் மூலமும் கொடுக்கலாமே" என்று கேட்டுவிட்டு நடைமுறைப்படுத்தினார். 

எண்ணிக்கை போதவில்லை. மேலும் ஆட்பலம் தேவைப்படவே மீண்டும் கூட்டம் கூட்டப்பட்டது. 

தனியார் நிறுவனங்கள், NGO க்கள் ரோட்டரி சங்கங்களை அழைத்து அவர்களையும் ஈடுபட செய்யலாமே என்று கலைஞர் கேட்க, 

தனியாரிடம் சென்றால் அரசாங்கத்திற்கு கெட்ட பெயர், நிர்வாகம் சரியில்லை என்பார்கள் என்று தலைமை செயலாளர் கூற,

"இந்த அரசாங்கம் ஊனமாக இருந்தாலும் பரவாயில்லை, என் மக்கள் ஊனமாக இருக்க கூடாது"

அவர்களையும் போலியோ ஒழிப்பில் ஈடுபடுத்த உத்தரவிட்டார். 

அப்போது பேராசிரியர் சொன்னார்

"என்னை இரண்டாமிடம் என்று கிண்டல் செய்வார்கள். செய்யட்டும். என்னுள் எழுந்தது பொறி மட்டுமே. ஆனால் அதற்கு செயலாக்கம் கொடுத்தது கலைஞர் தான். செயலூக்கம் உள்ளவருக்கு அடுத்த இடத்தில் இருப்பது பெருமையே" என்றார்.

#தமிழகம் 1983ல் போலியோ இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டது. 

#இந்தியா 2019ல் போலியோ இல்லாத நாடாக அறிவித்துக்கொண்டது. 

சத்தமா சொல்லுவோம்டா!!

 *திராவிடத்தால் வாழ்ந்தோம்!*
 *திராவிடத்தால் வாழ்ந்தோம்..!!* 
 *திராவிடத்தால் வாழ்ந்தோம்..!!!*

#ஜீரிசுந்தர்

Thursday, March 26, 2020

காசி, உஜ்ஜியினியில் சிக்கிய மதுரைவாசிகள் - பணம் அனுப்பி உதவிய திமுக எம்.எல்.ஏ சரவணன்

காசி, உஜ்ஜியினியில் சிக்கிய மதுரைவாசிகள் - பணம் அனுப்பி உதவிய திமுக எம்.எல்.ஏ
#covid19 | #CoronaVirus 


மதுரையை சேர்ந்தவர்கள் காசிக்கு ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு அவர்கள் உணவிற்கு பணம் இல்லாமல் தவிப்பதை அறிந்த திமுக எம். எல். ஏ. சரவணன், ரூ 20 ஆயிரம் அனுப்பி வைத்து உதவியுள்ளார். மேலும் மதுரையை சேர்ந்த 14 பேர் காசியிலும், 24 பேர் உஜ்ஜயினியிலும் தவிப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அவர்களுக்கும், காசியில் இருப்பவர்களுக்கு ரூ 10 ஆயிரமும், உஜ்ஜயினியில் இருப்பவர்களுக்கு ரூ 10 ஆயிரமும் உடனடியாக அனுப்பி வைத்துள்ளார்.https://twitter.com/ThanthiTV/status/1243363684748910592?s=19

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் தங்களுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வாங்க இதுவரைக்கும் யார் யார் எவ்வளவு தொகையை விபரம்

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி  உறுப்பினர்கள் தங்களுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில்  இருந்து அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வாங்க இதுவரைக்கும் யார் யார் எவ்வளவு தொகையை ஒதுக்கீடு செய்து இருக்கிறார்கள் என்று பார்ப்போம்..

✔️திரு. @SuVe4Madurai MP -ரூபாய் 56.17 லட்சம்
மதுரை தொகுதி

✔️திருமதி @ThamizhachiTh MP - ஒரு கோடி ரூபாய்
தென் சென்னை தொகுதி

✔️ திரு @GnanathiraviamS - ரூபாய் 60லட்சம் 
நெல்லை தொகுதி

✔️திரு. @kshanmugamdmk MP - ரூபாய் 50 லட்சம்
பொள்ளாச்சி தொகுதி

 ✔️திரு.வைகோ MP - ரூபாய் 1 கோடி.

✔️திரு. K. சுப்புராயன் எம். பி - ரூபாய் 50 லட்சம் 
திருப்பூர் தொகுதி

✔️திரு. @SSP_MANICKAM MP - ரூ.5 கோடி 
 தஞ்சை தொகுதி

✔️ திரு. @SigamaniGautham MP - 20 லட்சம்
     கள்ளக்குறிச்சி தொகுதி

✔️ செல்வி. @jothims MP - ரூபாய் 1,32,71,940 (ஒரு கோடியே முப்பத்திரண்டு லட்சத்து எழுபத்தோராயித்து தொள்ளாயிரத்து நாற்பது) 
கரூர் தொகுதி

✔️திரு. P. R. நடராஜன் MP - ரூபாய் 1 கோடி 
கோவை தொகுதி

✔️திரு. @thirumaofficial MP - ரூபாய் 1,26,61000 (ஒருகோடியே இருபத்தாறு இலட்சத்து அறுபத்தோராயிரம்)
  சிதம்பரம் தொகுதி

✔️ திரு. @DrSenthil_MDRD MP - ரூபாய் 1 கோடி 
தர்மபுரி தொகுதி

✔️திரு. @ThiruArasarINC - ரூபாய் 1 கோடியே 20 லட்சம்
திருச்சி தொகுதி

தொடர்ச்சி

✔️ திரு @WriterRavikumar - ரூபாய் 5 லட்சம் 
விழுப்புரம்

✔️ திரு @KNavaskani - ரூபாய் 20 லட்சம் 
ராமநாதபுரம்

✔️ திரு பாரிவேந்தர் MP - ரூபாய் 1 கோடி
பெரம்பலூர் தொகுதி

✔️ திரு. AKP.சின்ராஜ் MP - ரூபாய் 1 கோடி 
நாமக்கல் தொகுதி

✔️திரு. எம். செல்வராஜ் MP - ரூபாய் 60 லட்சம் 
நாகை தொகுதி

Wednesday, March 25, 2020

அன்று துறை முருகனை கிண்டல் செய்த எடப்பாடி அவர்களே இன்றைய தமிழகத்தின் நிலைக்கு என்ன பதில்??

சட்டசபையை ஒத்தி வையுங்கள், பெருநகரங்களை தனிமைப் படுத்துங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவியுங்கள், தேர்வுகளை ரத்து செய்யுங்கள், கொரோனாவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுங்கள் என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சொன்ன போது......

இங்கே எந்த பாதிப்பும் இல்லை, சட்டமன்றத்தை ஒத்தி வைக்க வேண்டிய அவசியமில்லை, நீங்கள் பயப்பட வேண்டாம் என பதில் வந்தது முதல்வர் எடப்பாடியிடமிருந்து. இன்னும் கூடுதலாக துரைமுருகனைப் பார்த்து,70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான் கொரோனா பாதிப்பு வரும் என்பதால் நீங்கள் பயப்படுகிறீர்கள் என்று கிண்டலாக பதிலளித்தார் எடப்பாடி.

இதெல்லாம் 2 வாரங்களுக்கு முன்பு

ஆனால் இன்று....?

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஸ்டாலின் சொன்னதைத் தான் செய்து கொண்டிருக்கிறது தமிழக அரசு....!

அதிமுக வீம்பு அரசியல் செய்ய வேண்டாம் ஒன் இன்டியா நாளேடு தலையங்கம்

#காழ்புணர்ச்சி அரசியல்

படித்து படித்து சொன்ன ஸ்டாலின்.. கொஞ்சம் கூட காதில் வாங்காத தமிழக அரசு.. கடைசியில் நிலைமை இதுதான்!

சென்னை: தமிழகத்தில் கொரோனாவிற்கு இடையிலும் +1, +2 தேர்வுகள் நடத்தப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று +2 தேர்வு நடத்தப்பட்டது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ்.. இந்த கொடூரமான வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு அதிகம் பரவ காரணமே மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதுதான். அதாவது கொரோனா வைரஸ் உள்ள ஒருவர் வைரஸ் இல்லாத ஒருவரை தொடர்பு கொள்வதன் மூலம்தான் இந்த வைரஸ் பரவுகிறது.

இதனால்தான் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் தனியே வீடுகளில் மருத்துவமனைகளில் வைக்கப்படுகிறார்கள். மக்கள் எல்லோரும் வீட்டிற்கு உள்ளேயே இருக்க வேண்டும் என்று இதனால்தான் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 அரசு மோசம்
தமிழகம் அரசு மோசம்
இதனால்தான் நாடு முழுக்க கொரோனா வைரஸை எதிர்க்கும் வகையில், 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. நாடு முழுக்க நேற்று இரவு 12 மணியில் இருந்து இந்த ஊரடங்கு அமலில் இருக்கிறது. தமிழகத்திலும் கூட 144 அமலில் உள்ளது. இத்தனை விஷயங்கள் இருக்கும் நிலையில் தமிழகத்தில் நேற்று +2 தேர்வுகள் நடத்தப்பட்டது. 144க்கும் இடையில் நேற்றுக்கு 12 தேர்வு எழுத மாணவர்கள் சென்றனர்.

 ஸ்டாலின் என்ன சொன்னார்
ஸ்டாலின் எதிர்த்தார்
தமிழகத்தில் கொரோனா காரணமாக தொடர்ந்து +2 தேர்வை எதிர்த்து வந்தவர் திமுக தலைவர் ஸ்டாலின்தான். தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று முதலில் கூறியது ஸ்டாலின்தான். 11&12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்து கொரோனா அச்சுறுத்தலை அதிமுக அரசு அலட்சியப்படுத்துகிறதா மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் தேர்வுகள் ரத்தாகியுள்ள நிலையில்- மாணவர்களின் பாதுகாப்புடன் விபரீத விளையாட்டு நடத்தாமல்,தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார்.

 ஆனால் அரசு கேட்கவில்லை
அரசு கொஞ்சம் கூட கேட்கவேயில்லை
ஆனால் இதை தமிழக அரசு கொஞ்சம் கூட காதில் வாங்கிக் கொள்ளவில்லை. வீம்பாக தேர்வு நடத்தியே தீருவோம் என்று கூறியது. கண்துடைப்பு சம்பவம் போல வெறும் 30 நிமிடம் மட்டும் தேர்வு நேரத்தை தள்ளி வைத்தது. 10 மணிக்கு பதிலாக 10.30க்கு தேர்வு தொடங்கும் என்று கூறியது. அதோடு நேற்று தேர்வும் திட்டமிட்டபடி நடத்தப்பட்டது. பேருந்துகள் இல்லை, ஆட்டோ, டாக்சிகள் இல்லை என்றாலும் கூட தேர்வு நடந்தது.

 மாணவர்கள்
மாணவர்கள் தேர்வு எழுதவில்லை
ஆனால் இந்த தேர்வை எழுத நேற்று 68-70 ஆயிரம் மாணவர்கள் வரவில்லை. முதலில் 36 ஆயிரம் பேர்தான் எழுதவில்லை என்று கூறப்பட்டது. தற்போது 70 ஆயிரம் பேர் வரை தேர்வை எழுதவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பேருந்து இல்லாததாலும், கொரோனா அச்சம் காரணமாகவும் பலர் தேர்வை எழுதவில்லை. முக்கியமாக சென்னை கோவையில்தான் பலர் இந்த தேர்வை எழுதவில்லை.

 மீண்டும் தேதி
மறு தேதி அறிவிப்பு
இந்த நிலையில் இவர்களுக்காக தற்போது மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு 24.3.2020 அன்று +2 தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் வேறொரு நாளில் தனியாக தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. முன்பே செய்திருக்க வேண்டிய வேலையை தற்போது அரசு தாமதமாக செய்துள்ளது.

 விளையாட்டு
இதில் என்ன விளையாட்டு
தமிழக அரசு முன்பே இதை செய்து இருந்தால் மாணவர்கள் பலர் நேற்று போய் தேர்வு எழுதி இருக்க வேண்டிய அவசியம் இருந்து இருக்காது. கஷ்டப்பட்டு கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் சென்னையிலும், காஞ்சிபுரத்திலும் மாணவர்கள் சென்று தேர்வு எழுதி இருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. அரசு கொஞ்சம் முன் யோசனையோடு செயல்பட்டு இருந்தால் மாணவர்கள் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திருக்க வேண்டியது இல்லை.

 ஸ்டாலின்
அரசியல் வீம்பு வேண்டாம்
தேர்வு போனால் திரும்ப வரும், ஆனால் உயிர் போனால் திரும்ப வருமா?. திமுக தலைவர் ஸ்டாலின் சொன்னார் என்ற ஒரே காரணத்திற்காக தேர்வை ஒத்திவைக்காமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம். நாடு முழுக்க முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இப்போதும் கூட தமிழக அரசு +2 தேர்வை ஒத்திவைப்பதாக அறிவிக்கவில்லை. இன்னும் தேர்வை ஒத்திவைப்பது தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிடவில்லைhttps://t.co/BnWc0P1HKj

முன்னாள் நிதி அமைச்சரும், சிறந்த பொருளாதார நிபுணருமான, பா. சிதம்பரம் அரசுக்கு வழங்கியுள்ள 10 ஆலோசனைகள்:-

முன்னாள் நிதி அமைச்சரும், சிறந்த பொருளாதார நிபுணருமான, பா. சிதம்பரம் அரசுக்கு வழங்கியுள்ள 10 ஆலோசனைகள்:-

நாடு முழுதும் 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு செய்ய வேண்டிய 10 கடமைகள் இதோ: 

1. பிரதமர் கிசான் திட்டத்தில் தரும் உதவித் தொகையை ரூ 12,000 ஆக உயர்த்தி உடன் வழங்க வேண்டும்.

2. குத்தகை விவசாயிகளின் பட்டியல்களை மாநில அரசுகளிடமிருந்து பெற்று ஒவ்வொரு குத்தகை விவசாயின் குடும்பத்திற்கும் ரூ 12,000 உடன் வழங்க வேண்டும்.

3. மகாத்மா காந்தி வேலைத் திட்டத்தில் பதிவு செய்துள்ள ஒவ்வொருவருக்கும் 
ரூ 3,000 உடன் வழங்க வேண்டும்.

4. ஜன் தன் திட்டம் அதனை ஒத்த முந்தைய திட்டங்களில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகள் (நகர்ப் புற வங்கிக் கிளைகளில் மட்டும்) ஒவ்வொன்றுக்கும் ரூ 3,000  உடன் வழங்க வேண்டும்.

5. ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 10 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக உடன் வழங்க வேண்டும்.

6. ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள தொழில் உரிமையாளர் அனைவரும் தற்போதுள்ள வேலைகளயோ ஊதியத்தையோ குறைக்கக் கூடாது என்று கட்டளையிட்டு அவர்கள் தருகின்ற ஊதியத்தை அரசு 30 நாட்களுக்குள் ஈடு செய்ய வேண்டும்.

7. மேற்கூறிய இனங்களில் அடங்காதவர்களுக்கு, ஒவ்வொரு வார்டிலும் ஒன்றியத்திலும் பதிவு அலுவலகம் திறந்து அத்தகைய ஏழைகளைப் பதிவு செய்து ஒவ்வொருவருக்கும் வங்கிக் கணக்கு திறந்து அக்கணக்கில் ரூ 3,000 உடன் வழங்க வேண்டும்.

8. எல்லா வகையான வரிகளையும் கட்டுவதற்கு இறுதி நாளை 30-6-2020 க்கு ஒத்தி வைக்க வேண்டும்.

9. வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய மாத தவணை (EMI) இறுதி நாட்களை 30-6-2020க்கு ஒத்தி வைக்க வேண்டும்.

10. மக்களின் அன்றாடத் தேவைக்கு பயன்படும் பொருள்கள், சேவைகள் மீது உள்ள ஜிஎஸ்டி வரி விகிதத்தை  5% உடன் குறைக்க வேண்டும்.
என்று கூறி உள்ளார் அவர் 

வகுப்புரிமை போராட்டம் ; பேராசிரியர் கா. அன்பழகன்

வகுப்புரிமை போராட்டம் ; பேராசிரியர் கா. அன்பழகன்

தகுதி திறமை என்று கூறும் 
துக்ளக் அறிவாளிகளே !!!

எது #தகுதி ??
எது #திறமை ??

வாள் வீசுகின்றார்!!
எங்கள் #இனமான_பேராசிரியர் 

#சமூக நீதியின் தடைக்கல் , மற்றும் அவசியம்  
...................................

பிராமணர்கள் மட்டுமே படிக்கலாம் வேதம் ஓதும் குருவாகலாம் 
அது அவர்களின் கடமை.

மற்றவர்கள் படிப்பது பாவம் 

படித்தால் நாக்கை அறு
கேட்டால் காதில் 
ஈயத்தைக் காய்ச்சி ஊற்று 
தவம் செய்தால் தலையை வெட்டு இப்படிப்பட்ட வர்ணாசிரம நீதி தான் நாட்டில் இருந்தது.

இப்படி ஒரு அளவுகோலை தீர்மானித்து விட்டு தகுதியைப் பற்றி தீர்மானிப்பது என்பது எப்படி நியாயமாகும்

ஒரு சிறு கதை #மூன்று குடும்பங்களின் ஒப்பீடு
...,.........................

#உயர்சாதி :👇

#பார்ப்பன மாணவர்களுக்கு கிடைத்துள்ள வசதி சூழ்நிலை மற்ற
பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைப்பது இல்லை

#அட்வகேட் ஆனந்தாச்சாரியின் மூன்றாவது மகன் சந்தானம் இன்டர்மீடியட் வகுப்பு படிக்கிறான்

அவனது பெரியண்ணா 
பட்டாபிராமன் டாக்டர்

தமக்கை சீதாலட்சுமி பிஏ பட்டதாரி

சின்ன அண்ணா ரங்கசாமி என்ஜினியரிங் கல்லூரியில் படிக்கிறான்

#உயர்சாதி ஏழை:

வக்கீல் குமாஸ்தா கோவிந்தசாமி பிள்ளை இரண்டாவது மகன் சண்முகம் இன்டர்மீடியட் வகுப்பில் படிக்கிறான்

அவன் அண்ணன் ஆறுமுகம் எஸ்எஸ்எல்சி பாஸ் செய்துவிட்டு 
தபால் அலுவலகத்தில் 
கிளார்க் வேலையில் உள்ளான்

அவன் தங்கை சரஸ்வதியோ 
நான்காம் வகுப்போடு 
பள்ளியை நிறுத்திவிட்டு 
மணபருவத்தை எட்டி 
வீட்டில் உள்ளார்

இன்னும் சின்ன தம்பியும் தங்கையும் வேறு இருக்கிறார்கள்.

#பிற்படுத்தப்பட்டோர்

#கூலிவேலை செய்து வயிறு கழுவும் குப்பன் மகன் ரத்தினம் 
இண்டர்மீடியட் வகுப்பில் படிக்கிறான் 

(ஆச்சரியமாக இருக்கும்)

அவனது தாய் புல் அறுக்கப்போவதும் தமக்கை வக்கீல் வீட்டில் 
கூலி வேலை செய்வதும்
தம்பியும் தங்கையும் ஒரு வேளை உணவுக்கே வாடி வதங்கி கிடப்பதும் அவன் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கை 

தகப்பன் எப்பாடுபட்டாவது 
தன்னைப் படிக்க வைக்க முன் வந்த காரணத்தால் அரசாங்க ஸ்காலர்ஷிப் உதவியுடன் தட்டுத் தடுமாறி இண்டர்மீடியட் 
வகுப்பில் படித்து வருகிறான் ரத்தினம்

இந்த மூன்று சமூகங்களை சேர்ந்த மூவரும் ஒரே வகுப்பில் 
ஒரே கல்லூரியில் 
படித்துக் கொண்டு உள்ளனர்.

#சமூக நீதியின் #அவசியம் 

இவர்களுக்கு இடையே உள்ள 
வேறுபாட்டை ஒரு கணம் உங்கள் மனக்கண் முன் கொண்டு வாருங்கள்

அட்வகேட் மகன் சந்தானம் 
10 மணிக்கு ஆஸ்டின் காரில் புறப்பட்டு
கல்லூரிக்கு போகும்முன் 
தந்தையிடம் தலையை சொரிந்து காபிக்கு காசு வாங்கிக்கொண்டு செல்கிறான்.

9.30மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி பேருந்துக்கு காத்திருக்கும் சண்முகதிற்கு ஒருநாள் 
சந்தானம் காரில் இடம் 
கிடைப்பது உண்டு 

ஆனால் ஒவ்வொருநாளும் கார் நிற்கும் என்று எதிர்பார்த்து சண்முகம் ஏமாறவும் இதுவே காரணமாகவும் இருக்கும்

குப்பன் மகன் ரத்தினம்
வயல்வெளி குறுக்கு பாதை 
வீட்டிலேயே அரை வயிறு கால் வயிறு மட்டும் உணவு
அத்துடன் அவிழ்த்து வைத்திருந்த ஆடையை உடுத்திக் கொண்டு 
காலை 9 மணிக்கு புறப்பட்டு 
நான்கு மையில் நடந்து 
கல்லூரியை அடைகிறான்

வக்கீல் மகன் இடைவேளையில் உண்பது விருந்து போல இருக்கும் 

குமஸ்தா மகன் வடை ஒரு காப்பி ஆறுதல் அடைவான் 

கூலிக்காரன் மகன் 
புளிய மரத்தடியிலே களைப்பை 
போக்கி கொள்வான் 
பசிக்கும்போது தம்பி தங்கையை எண்ணி அதை மறப்பான்

மாலையில் வக்கீல் மகன் 
பீச் ரோட்டில் காற்று வாங்கி 
வீடு திரும்புவான்

காப்பி அருந்தி சிறிது ஓய்வாக ரேடியோவில் பாடல் கேட்பான்

மணி 7 ஆனதும் மின்சார விளக்கு விசிறி உடன் படிக்க உட்காருவான்

கணக்கில் சந்தேகம் என்றால் 
சின்ன அண்ணாவை கேட்பான்

ஆங்கிலம் என்றால் 
அக்காவிடம் கேட்பான்

பொது அரசியல் தெரிந்து கொள்ள அப்பாவிடம் பேசுவான்
 
தலைவலி படிக்கும்போது ஏற்பட்டால் டாக்டர் அண்ணாவை  கூப்பிடுவான். 

கல்லூரியில் முதல்வரை தெரிந்து இருப்பதும்
 சமஸ்கிருதத்தில் படிக்காமலே 
மார்க் வாங்குவதும் இவனை படிப்பிலே உற்சாகமூட்டும் கருவியாய் இருக்கும்

இரவு10 ஆனாதும் சாப்பிட்டு 
படுத்து விடுவான்

குமஸ்தாவின் மகனோ
 வீடு திரும்பியதும் 
காபிக்கு வழியில்லையே என்று 
எண்ணி உணவுக்கு காத்திருப்பதும் 
அரிக்கன்லைட்டை 
துடைத்து ஏற்றி வைத்துவிட்டு உட்காருவான்

பக்கத்தில் தம்பியும் தங்கையும் 
சத்தம் போட ஆரம்பித்தால் கோபப்படுவதும் 
சந்தேகம் ஏற்பட்டால் யாரையும் கேட்கவழியில்லையே என திகைப்பான்.

தேவைப்படும் எல்லா புத்தகங்களும் கூட வாங்க முடியாத நிலையில் 
நாம் ஏன் குடும்பத்திற்கும் பாரம் 
படிப்பை விட்டுவிட்டு ஏதேனும் வேலைக்கு போய்விடலாம் என்று எண்ணுவதும் நாம் அறிந்ததுதான்

கூலிக்காரன் மகன் இருட்டும் போது குடிசை வருவான்.

குடும்பத்தார் படும் வேதனை கண்டு துயரம் நெஞ்சை அடைக்கும்

 இரவல் புத்தகங்களை
 அகல் விளக்கு எரியும்வரையில் புரட்டுவான்

 அப்புறம் தெருவிளக்கில் 
படிக்க துவங்குவான்

தலையணை இன்றி 
உடுக்கப் போதுமான உடையில்லாமல் பசி நீங்க போதுமான உணவில்லாமல் குமுறல் அடங்காத மனத்துடன்
தான் படிப்பதே தன் குடும்பத்திற்கு செய்யும் கொடுமை 
இப்படி ஏக்கப் பெருமூச்சோடு 
கண்ணீர் விடுவதுமே 
அவன் படிப்பதற்கு உள்ள சூழ்நிலை என்பதை மனம் உள்ள 
எல்லோரும் அறிவோம்.

வக்கீல் மகனுக்கோ 
படிப்பு உல்லாச ஓடம் 

குமாஸ்தாவின் மகனுக்கு 
படிப்பு ஒரு பாரவண்டி 

கூலிக்காரன் மகனுக்கு 
படிப்பு ஒரு தலைச்சுமை பாரங்கல்.

இந்நிலையில் உள்ள வாழ்வியல் முறையில் படிக்கின்ற மூவரும்
தேர்வில் தேர்ச்சி பெற்று 
வாங்கும் மதிப்பெண் 
உண்மையான தகுதியைக் காட்டும் என்று யார்தான் கூறமுடியும்!? முடியுமா??

சமூகநீதி எங்களுக்கு வேண்டும் #அனைவர்க்கும்_அனைத்தும் என்பதுதான் சமூகநீதி

பசி ஏப்பக்காரர்களை 
பந்தியில் முதலில் அமரவைத்து 
அவர் பசி போக்கிடவே 
முன்னுரிமை தரவேண்டும்

புளிஏப்பக்காரர்களை 
சற்றுப் பொறுத்து அடுத்த பந்தியில்
அமர வைக்கப்படவேண்டும் என்று உணர்த்திடும் 
தத்துவம்தான் 
வகுப்புரிமை 
சமூகநீதி 
இட ஒதுக்கீடு.

  

திமுக சட்டமன்ற உறுப்பினர். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஸ்டாலின் உத்தரவு

திமுக தலைவர் ஸ்டாலின் :
25/3/2020- Wednesday

#CoronaVirus தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் திமுக MPs & MLAs அனைவரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, தங்களது நாடாளுமன்ற / சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேவையான நிதி ஒதுக்கீடு செய்திடவும். 

#CoronaVirus தடுப்பு நடவடிக்கைகளுக்கு  இப்போது அதிமுக அரசு ஒதுக்கியுள்ள 3280 கோடி ரூபாய் நிதியுதவி போதாது என்பதால் மத்திய அரசிடம் அதிக நிதி கேட்டுப் பெற்றாவது நான் முன்வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும்.  

Tuesday, March 24, 2020

அதிமுகவுக்கு திமுக அளித்த 9 அறிவுரை - கொரானா ஆட்டம்

திமுக தலைவர் ஸ்டாலின் அரசுக்கு அளித்த 9 #அடவைஸ்

சரியான அட்வைஸ் தந்த ஸ்டாலின்.. லேட்டாக முடிவு எடுத்த முதல்வர்

உலகம் முழுக்க போரும், பொருளாதார சீர்குலைவும் ஒரு நாட்டின் தலைவரின் தலைமைப்பண்பை தீர்மானிக்கும். இக்கட்டான சூழ்நிலையில் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதுதான் தலைமைப்பண்பை தீர்மானிக்கும். அதில் தற்போது கொரோனா வைரஸை சேர்த்துக் கொள்ளலாம்.

ஆம் கொரோனா வைரஸை எப்படி அரசியல் தலைவர்கள், பிரதமர்கள், மாநில முதல்வர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்துதான் அவர்களின் தலைமைப்பண்பு தீர்மானிக்கப்படும். அவர்களின் ஆட்சி அதிகாரம், திறமை முடிவு செய்யப்படும்.


 திமுக தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தன்னுடைய திறமையை காட்டி உள்ளார்.  ஒரு எதிர்க்கட்சியாக அரசை எப்படி எல்லாம் வழி நடத்த முடியுமோ அப்படி எல்லாம் தமிழக அரசை திமுக தலைவர் ஸ்டாலின் வழி நடத்தி வருகிறார்.

 ஸ்டாலின் பேசும் நிலவரம் 
ஸ்டாலின் நிலவரத்தை பேசுகிறார்
இதற்கு நிறைய உதாரணங்களை சொல்லாம்.

நடவடிக்கை -1

#முதலில் தமிழகத்தில் லாக் டவுன் கொண்டு வர வேண்டும் என்று கூறியது #திமுகதான்.

நடவடிக்கை-2

சட்டமன்ற கூட்டத் தொடரை நிறுத்திவிட்டு, எம்எல்ஏக்களை மக்கள் பணி செய்ய அனுப்ப வேண்டும் என்று கூறியது #ஸ்டாலின்தான்.

நடவடிக்கை-3

மக்களை வீட்டிற்குள் அடைக்க வேண்டும், அதே சமயம் அவர்களுக்கான உதவிகளை செய்ய வேண்டும் என்றதும் #திமுகதான்.

நடவடிக்கை-4

மக்களுக்கான #பொருளாதார தேவை குறித்து பேசியது #ஸ்டாலின்தான்.

நடவடிக்கை-5

மிக முக்கியமான மருத்துவமனை நிலை, அதை தயார் செய்வது குறித்தும் திமுக தலைவர் #ஸ்டாலின்தான் முதல் ஆளாக பேசினார்.

நடவடிக்கை-6

 கோரிக்கை 
ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்
கொரோனா, 144 தடை ஆகிய சூழலில் வெளியூர்வாசிகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்காமல் மக்களை சாலையில் நிறுத்தியிருக்கிறது அரசு. பேருந்துகளைக் குறைத்தால் எப்படி ஊருக்குச் செல்வார்கள் என்கிற எண்ணம் கூடவா இல்லை? உடனே பேருந்துகளை அதிகரித்து, மக்களுக்கு இலவச பயணத்தை அனுமதிக்க வேண்டும், என்று கூறினார். கூட்டம் அதிகம் ஆனால் கொரோனா பரவும் என்பதால் அப்படி கூறினார்.

நடவடிக்கை-7

சம்பளம் குறித்து பேசினார்
அதேபோல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மாத சம்பளம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஒரு மாதத் தேவைக்கான #நிதியுதவி, ஏழைகளுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். தனிமைப்படுத்துதலை பொதுமக்கள் கவனமும், அக்கறையும் கொண்டு கடைப்பிடிக்க வேண்டும், என்று கூறினார். ஊழியர்கள் மாத #சம்பளம் குறித்து பேசிய முதல் கட்சி #திமுகதான்.

நடவடிக்கை-8

தேர்வுகள் எப்படி
மேலும், 11&12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்து கொரோனா அச்சுறுத்தலை அதிமுக அரசு அலட்சியப்படுத்துகிறதா?மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் தேர்வுகள் ரத்தாகியுள்ள நிலையில்- மாணவர்களின் பாதுகாப்புடன் விபரீத விளையாட்டு நடத்தாமல்,தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும், என்று மாணவர்களின் நலன் குறித்தும் #திமுகதான் பேசியது. அதிமுக இன்னும் இதில் பிடிவாதமாக இருக்கிறது.

நடவடிக்கை-9

தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் நடைபாதைவாசிகள் - இரவலர் ஆகியோருக்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், சட்டமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என்றும் #ஸ்டாலின்தான் வலியுறுத்தினார்.

 திமுக தற்போது நல்ல எதிர்க்கட்சியாக சரியான ஆலோசனைகளை சரியான நேரத்தில் வழங்கி வருகிறது. 

அதிமுகவும் திமுகவின் அட்வைஸ் கேட்டு  முடிவுகளை எடுத்து வருகிறது. 

நன்றி @ஒன் இண்டியா

Friday, March 20, 2020

திமுக தலைவர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் உரை ( கொரானா)

*கொரோனோ* மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து *எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சட்டமன்ற உரை* .. 👇🏻

மக்கள் முதல்வரின் சரியான அணுகுமுறை 👌🏾💓💓

கடையை மூடிவிட்டால் நமது கடமை முடிந்து என்று இருக்கும் அடிமை எடப்பாடி அவர்களுக்கு சரியான அறிவுரை

Tuesday, March 17, 2020

திராவிடத்தால் வாழ்ந்தோம் - ஜெயரஞ்சன்

50 வருஷமா இங்க ஒன்னும் செய்யலன்னு சொல்றவன எதுல கட்டி அடிக்குறது?

குஜராத் மாடலின் லட்சணம்

1974லேயே அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் கொடுத்தது கலைஞர் , அரசு போக்குவரத்துக் கழகம் ஆரமித்தது திமுக அரசு.இதெல்லாம் இந்தியா ல எங்கேயும் இல்ல,

 திராவிடத்தால்_வாழ்ந்தோம்_ஜெயரஞ்சன்

பத்தாண்டுகளாக தமிழ் மக்களை வஞ்சித்த அதிமுக அரசு.

பத்தாண்டுகளாக தமிழ் மக்களை வஞ்சித்த அதிமுக அரசு.
 தேர்தல் என்றவுடன் மக்கள் நினைவுக்கு வருகிறார்கள் போல   😡😡😡😡

ஆதாரம் 👇

https://tamil.oneindia.com/news/2010/09/08/tamilnadu-school-education-tamil-medium-govt-job.htmlhttps://tamil.oneindia.com/news/2010/09/08/tamilnadu-school-education-tamil-medium-govt-job.html

திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கைக்கு பணிந்த தமிழக அரசு

Monday, March 16, 2020

திமுக தலைவர் ஸ்டாலின் சாதாரணமாக திமுகவின் தலைமை பொறுப்புக்கு வந்து விடவில்லை

#கழகத்தலைவர் பாசமிகு #தளபதியார் அவர்கள் அவ்வளவு எளிதில் #தலைமைக்கு வரவில்லை. அவர் கடந்து வந்த பாதை இதோ உங்கள் பார்வைக்கு:

#பிறப்பு : 
1953ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி கருணாநிதி – தயாளு அம்மாளுக்கு 3வது மகனாக பிறந்தார்.
#ரஷ்ய அதிபர் ‘#ஜோசப் ஸ்டாலின்’ நினைவாக தனது மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் வைத்தார் தலைவர் #கலைஞர் கருணாநிதி அவர்கள்.

#கல்விப் பருவம்: 
சென்னை சர்ச் பார்க் பள்ளியில் கழகத்தலைவர் ஸ்டாலின் அவர்களை சேர்ப்பதற்கு விண்ணப்பித்தபோது, அவரின் பெயருக்காகவே விண்ணப்பம் மறுக்கப்பட்டது.
இதனை தெரிவித்தபோது, மாற்ற வேண்டியது பள்ளியை தான் பெயரை அல்ல என்று கூறினார் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.
பின்னர் கழகத்தலைவர் ஸ்டாலின் அவர்கள் கிறிஸ்துவ மேனிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

#அரசியல் பிரவேசம் : 
1967ம் ஆண்டு, 14 வயதிலேயே அரசியலில் தந்தையுடன் இணைந்து கால் பதித்தார் கழகத்தலைவர் ஸ்டாலின் அவர்கள். அப்போது திமுக முதல் முறையாக ஆட்சி அமைத்திருந்தது.
14 வயதில் கழகத்தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள்
1972ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற செங்கற்பட்டு மாவட்ட தி.முக.வின் சார்பாகத் தோழர்களை அழைத்துக்கொண்டு தொடர் ஓட்டமாக வந்து அண்ணா ஜோதியை தலைவர் கலைஞர் அவர்களிடம் வழங்கினார்.
1973ம் ஆண்டு திமுக-வின் பொதுக்குழு உறுப்பினரானார்.
14 வயதில் அரசியல் களத்தில் கழகத்தலைவர் ஸ்டாலின் அவர்கள்
1973இல் புதுக்கோட்டை மாவட்டக் கழகத் தேர்தலை மு.க.ஸ்டாலின் ஆணையாளராகச் சென்று முதன்முறையாக நடத்தினார். அதுபோன்றே செங்கை மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத் தேர்தலையும், ஆணையாளராக இருந்து நடத்தி வைத்தார்.

#அவசரக் காலச் சட்டத்திற்கு பிறகு:
1975ம் ஆண்டு அவசரக் காலச் சட்டத்தின்போது உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் (மிசா) கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
1984ம் ஆண்டு திமுக இளைஞர் அணி செயலாளர் பொறுப்பை வகித்து வந்தார்.
இளைஞர் அண்டி செயலாளராக இருந்தபோது, 1984ம் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் தோல்வியை தழுவினார்.
பின்னர் அதே தொகுதியில், 1989ம் ஆண்டு தேர்தலில் வெற்றியடைந்து சட்டப்பேரவைக்குள் கால் பதித்தார்.

#ராஜிவ் காந்தி கொலைக்கு பின் ஆட்சி 
கலைப்பு: 
1991ம் ஆண்டு ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டார். அப்போது இருந்த திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.
5 ஆண்டுகளுக்கு பின்பு, 1996 தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மீண்டும் வெற்றியை தழுவினார் ஸ்டாலின்.
மு.க. ஸ்டாலின் மேயர் பதவியில்
பின்பு, உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சிக்கு நேரடி மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை மாநகராட்சிக்கு நேரடியாக தேர்வான முதல் மேயர் என்ற பெருமை இவருக்கே உரியது.

#மீண்டும் சட்டப்பேரவைக்குள் ஸ்டாலின்: 
2001 தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியிலேயே, மூன்றாவது முறையாக வெற்றிப்பெற்று சட்டப்பேரவைக்குத் தேர்வானார். அதே ஆண்டு மீண்டும் சென்னை மேயர் பதவி வகித்தார்.
மேயர் பதவியில் ஸ்டாலின்
ஆனால், 2002ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு கொண்டுவந்த சட்டத்தால் மேயர் பதவியலிருந்து அவர் விலகும் நிலை ஏற்பட்டது. இருப்பினும், எம்எல்ஏவாகத் தொடர்ந்து இருந்தார்.
திமுக பொருளாளர் மற்றும் துணை 

#முதல்வர் பதவி ஏற்பு: 
2006 பேரவைத் தேர்தலில் அதே தொகுதியில் 4ஆவது முறையாக வெற்றியடைந்த ஸ்டாலின்,  உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
2008ஆம் ஆண்டு திமுக பொருளாளராக பொறுப்பேற்றார்.
2009ஆம் ஆண்டு துணை முதலமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளின் சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார் ஸ்டாலின்.

#செயல் தலைவர் ஆனார் ஸ்டாலின் : 
2017ம் ஆண்டு ஜனவரி முதல் திமுக தலைவராக இருந்த மு.க. கருணாநிதியின் உடல்நலம் பாதிப்படைந்தது. அப்போது கருணாநிதியால் கட்சி வேலைகளில் முழு வீச்சில் ஈடுபட முடியவில்லை.
அப்போது திமுக – வின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார் ஸ்டாலின்.

#திமுக – வின் புதிய 2ம் தலைவர் 
ஸ்டாலின் அவர்கள்: 
முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு, கட்சியின் தலைவர் பதவிக்கு மு.க. ஸ்டாலின் மனு தாக்கல் செய்தால்.
திமுக தலைவர் பதவிக்கு எவ்வித போட்டியுமின்றி நேரடியாக தேர்வானார்.
இன்று திமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் கூட்டப்பட்டு அங்கு கட்சியின் புதிய தலைவர் ஸ்டாலின் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறாக இன்றளவும் அரசியலில் முதிர்ந்த அனுபவம் பெற்றவருமாக, கழகத்தை கட்டுகோப்பாக வழி நடத்தி வருகிறார்.

திமுகவைப் பற்றி இன்றைய தலைமுறைகள் உணர்ந்திருக்கிறார்கள்

https://youtu.be/-aJvO5zIM9g


வாய் கூசாமல் பொய் பேசும் சிலருக்கும், உண்மை தன்மை அறிய முற்படாமல் இருக்கும் சிலருக்கும் இந்த காணொளி உதவியாக இருக்கும், 

உங்களை  கலைஞரை கொண்டாட சொல்ல வில்லை, திமுகவுக்கு ஓட்டு போட சொல்ல வில்லை . உண்மை அறியாமல் தூற்றாதீர்கள் என்றுதான் சொல்கிறோம்.
 நன்றி மறப்பது நம் பண்பாடு அல்ல

Sunday, March 15, 2020

கலைஞர் எப்பேற்பட்டவர்? யாருக்கு ஆவாதவர்?கலைஞர் முதல்வராக பதவியேற்று முதன்முதலாக தனது சொந்த ஊருக்கு போகிறார். அவர் காண விரும்பிய முதன்மையான நபர் சேதுராம அய்யர். அவர் கலைஞரின் வகுப்பு ஆசிரியர். உங்களுக்கு நான் ஏதாவது செய்ய நினைக்கிறேன். என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் என்று கேட்க. ஆசிரியர் டில்லியில் உள்ள தனது மருமகன் சென்னைக்கு மாற்றல் வாங்கி தர முடியுமா என்று கேட்க, அதெல்லாம் ஒரு விஷயமே அல்ல. அதை நான் செய்து கொடுக்கிறேன். வேறு என்ன வேண்டும் என்று கேட்க, அவரோ தயங்கி வாய் திறக்காது இருக்க, பிறகு அவரது மகள் படித்து முடித்ததை உணர்ந்து, அவருக்கு மருத்துவர் சீட் வாங்கி கொடுக்க ஏற்பாடு செய்து மருத்துவர் ஆக்கியது வரலாறு.எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு.எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.எந்த தனிப்பட்ட சாதியனருக்கும் கலைஞர் எதிரி அல்ல...👇

சமூகநீதி காத்த தலைவர் கலைஞர்

கணினி பாட நூல் 1969

தமிழகத்தில் 1969ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற, 

இன்றைய  காலகட்டத்தில் உள்ள  படித்த   இளைஞர்கள்  பாசையில் சொல்ல போனால் திருட்டு ரயில்  கருணாநிதி,

ஆம் இளயசமுதாயமே முதல்வர்  மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராகவும் பொறுப்பேற்கிறார் ஒரே நேரத்தில்.

ஆகவே  உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் 1970களில் கலைஞர் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட பாடப்புத்தகங்களை புரட்டிப்பாருங்கள். 

நேரம் இருந்தால்.   

உங்களுக்கு நேரம் எங்கே  இருக்கிறது சினிமா மோகம் ரஜினி சொல்லி விட்டார் கமல் சொல்லி விட்டார். அவர்களுக்கு பால் அபிஷேகம் பண்ணும் கையில் காசு இல்லை.

இருக்கவே இருக்கிறான் நம் அப்பன் காசு கொடுப்பான் என்ற எண்ணம் உங்களுக்கு, 

உன்னால்  உழைத்து கட்டவுட்க்கு பால் ஊட்ற வக்யில்லை சரி விடு,

நம்ம கதைக்கு  வருவேம் வளர்ந்த நாடுகளில் கூட கணினி குறித்த பார்வை இல்லாத காலகட்டமது.. 

அப்போதே கணினியின் பயன்பாடு குறித்து தமிழ்நாடு பாடநூல் கழகம் "கம்ப்யூட்டரும் அதன் பயன்களும்" என்ற புத்தகத்தை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தது இந்த  திருட்டு ரயில் கருணாநிதியால்,

அதாவது  திருட்டு கருணாநிதி மட்டும் 1999ல் அரசுப் பள்ளிகளில்  கணிணி அறிவியல் பாடத்தை அறிமுகம் செய்யாமல் இருந்திருந்தால்...

நானும் நீயும்  ஒரு கூலித் தொழிலாளியியாயிருபோம். 
நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது. 

தமிழகத்தில் தகவல் தொழில் நுட்பம் சிறக்க & தழைக்க வைத்த எம் திராவிடப்பேராசான் கருணாநிதி அல்லவா,

இளைஞர்களே நீ ஒட்டு போடு போடாமல்  இரு அது உன்னுடைய  இஸ்டம்,,

ஆனா இளைஞர்களுக்கும்  அரசியலில் வாய்ப்பு    வேண்டும்,

உழைக்க மட்டும் அல்ல  உன்னையும் சமுதாயத்தில் அடையாளம் காட்டபட வேண்டும் என்று உழைத்த இயக்கம்  திமுக அல்லவா.🙏🙏🙏





1975 குன்றக்குடி அடிகளார் உரை

1975 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 தேதி சென்னையில் அண்ணா சாலையில் கலைஞர் சிலை திறக்கப்பட்டது. அந்த சிலையை திறந்து வைத்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார். அந்த சிலையை வைக்க ஆசைப்பட்டவர் தந்தை பெரியார். அந்த சிலையை வைத்து பெரியாரின ஆசையை நிறைவேற்றியவர் அன்னை மணியம்மையார்.
 
அந்த நிகழ்ச்சியில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் பேசியது  இன்றைக்கு இந்தகாலகட்டத்தில் ஒவ்வொரு தமிழனும்எண்ணிப்பார்க்கவேண்டியது.. சிந்திக்கவேண்டியது.. சீர்தூக்கிப்பார்த்து செயலாற்றவேண்டியது ஏராளமாக இருக்கிறது..

படியுங்கள் அவருடைய உரையை.. 

”ஆயிரம் சிறப்புகள் தமிழனுக்கு உண்டு. அதற்குள்ளே ஒரே இழிகுணம் உண்டு. ஒரு தமிழன் வாழ இன்னொரு தமிழன் பொறுத்துக் கொள்ளமாட்டான். ஆகவே இனவழிபட்ட பகைமை இருக்கிறதே அது தமிழனுக்கு அதிகம். எனவேதான் தமிழ் இலக்கிய சுவடிகளைப் புரட்டினால், அய்யா (பெரியார்) அவர்களுக்குக் கூட கோபம் வரும் சேரனை பாண்டியன் அடித்தான் பாண்டியனை சோழன் அடித்தான் இதுதானே என்று பேசுவார்.”
 
”தமிழினத்தின் ஒருமைப்பாட்டை நாம் கட்டிக் காக்கத் தவறியதால்தான் நாடாண்ட தமிழினம் கிழக்காசிய நாடுகள் முழுவதும் பரவி வாழ்ந்த தமிழினம் அந்த நாடுகளில் எல்லாம் தனது கலையை – கொற்றத்தை- வாழ்க்கை நெறிகளைப் பரப்பிய தமிழினம் வீழ்ந்துபட்டது என்று சொன்னால் அறிவினுடைய ஆற்றல் குறைவினால் அல்ல ஆளுமைத் திறன் இல்லாதாதினலும் அல்ல, அவர்களுக்குள்ளே ஏற்பட்ட பகை இருக்கிறதே அதுதான் காரணம். அதனால்தான் உலகப் பொதுமை பெசிய திருவள்ளுவர் கூட குடிசெயல் என்ற அதிகாரம் வைத்தார்.”
 
”நீ பிறந்த குடியை ஆளாக்கு; நீ பிறந்த குடியை வளர்த்துவிடு; நீ பிறந்த குடிக்கு இடையூராக நிற்காதே என்றார்.”
அப்படி சொல்கிறபோது சொன்னார்; மூன்று கடமைகளைப் பின்பற்றினால் தமிழினம் வளரும் என்று சொன்னார்.
 
முதல் கடமையாகச் சொன்னார்- எந்த கடமையை செய்யவும் நாள் பார்க்காதே, பருவம் பார்க்காதே என்றார். பஞ்சாங்கங்களுக்கு நாம் அடிமையாக இருக்கும் வரை நிச்சயமாக நமது முயற்சிகள் தடைபடும். நம்முடைய நாட்டில் இருக்கிற வேடிக்கை – முற்போக்குப் பத்திரிகை என்று தலையிலே போடுவார்கள்- கீழே ராசிபலனையும் போடுவார்கள் .இதிலே எது முற்போக்கு என்று தெரியவில்லை.
 
அடுத்து மடி செய்யாதே – சொம்பலை செய்யாதே- நாளை செய்யலாம் என்று ஒத்தி போடாதே – இன்றே செய் என்றார்.
 
 
மூன்றாவது முக்கியமானது மானம் பார்க்காதே – நீ தமிழனொடு தமிழனாக வாழும் போது உன்னுடைய தமிழனிடம் நீ மானம் பார்க்காதே- அவனிடத்தில் தோல்வி அடையாதே – பெருமையாக இரு என்றார்.
 
இந்த குறளைக் கூட எனக்கு எடுத்துச் சொன்ன ஆசிரியர் யார் என்று சொன்னால் – ஒரு தடவை நானும் அய்யாவும் திருநெல்வெலிக்குச் செல்ல திருப்பரங்குன்றத்தில் இருந்து ஒரே காரில் பயணம் செய்கிறோம்.
 
கொஞ்ச நேரம் போனதும் தன்னுடைய பையில் இருந்து திருக்குறள் புத்தகத்தை எடுத்து இந்தத் திருக்குறளைக் காட்டி படித்தீர்களா என்று கேட்டார். நான் படித்துப்பார்த்தேன். – அய்யா சொன்னார் – மானம் பார்க்காதே- என்று போட்டு இருக்கிறார்களே ஏன் தெரியுமா? – நான் தமிழர்கள் என்று சொன்னால் தமிழன் வசை செய்தாலும் பரவாயில்லை- அவன் தமிழனாக இருந்து வசை செய்து கொண்டு போகட்டும்என்று சொல்வது எனக்கு வழக்கம் என்றார்.
 
தமிழன் தமிழனிடத்திலே பெருமை சிறுமை பாராட்டாதீர்கள் என்று திருவள்ளுவர் சொன்னார்.
இந்த அடிப்படை பண்பைத் தமிழினம் என்றைக்குப் பெருகிறதோ அன்றைக்குதான் நம்முடைய இனம் மீண்டும் வளர்ச்சி அடைய முடியம்.
 
பெருகின்ற எழுச்சி அப்படியே பாதுகாக்கப்படும் என்று எண்ணாதீர்கள். ஏற்றிய அடுப்பை அணையாமல் ஊதி வளர்த்துகொண்டே இருப்பது போல , எழுச்சி கொண்ட இன உணர்ச்சி தொடர்ந்து பாதுகாத்தால்தான் அது நம்மிடத்திலே  ஒழுங்காக இருக்கும். இல்லையானால் நாலிரண்டு எலும்பு துண்டுகள் வந்து விழுந்தால் நம்மவர்களில் கூட சிலபேர் நிலைகலங்குவார்கள். அதற்குப் பிறகு இலட்சியக் கோட்டைகள் தளர்ந்து விழும் நிலை வந்துவிடும்.
 
எனவே அண்ணா அவர்கள் ஒரு கற்பனை சொன்னார்கள்.
அண்ணா அய்யா அவர்களைப் பிரிந்திருந்த காலம். மற்றவர்களுக்கு அது எவ்வளவு சவுகரியமாக இருக்கும் என்று கருதுகிறீர்கள். ?
 
இரண்டு பேர்களுக்கு இடையே இலேசான மனமாறுதல் ஏற்பட்டு இருக்கிறது என்றால் அதை அகலமாக்குகின்ற நிபுணர்கள் நம்முடைய நாட்டிலே உண்டு.
 
அண்ணா அவர்கள் எழுதினார் “கொய்யாப்பழம் பறிக்கப் போகும் போது கருநாகம் காலைக் கடிக்க வருகிறது.”  நம்முடைய நோக்கம் கொய்யாப் பழத்தைப் பறிப்பது. அதற்காக நாம் ஏறுகிறோம். காலிலெ கருநாகம் சுற்றிக் கொள்கிறது..கடிக்க வருகிறது. நாம் கொய்யாப்பழத்தைப்  பறிப்பதற்கு நாகம் கடித்து சாவதா? என்று கேட்டுவிட்டு கொய்யாப்பழம் திராவிடர் கழகம் அதைப்பறிக்க புசிக்க ருசிக்க ஆசைதான் ஆனால் காலைச் சுற்றி கடிக்க வருகிறது இந்த நாட்டு மேட்டுக்குடி சாதி ஆதிக்கம் என்ற் கருநாகம் ஆகவே கொய்யாபழத்தை இழந்தாலும் இழப்பேன் இந்தப் பாம்பு கடித்து சாகமாட்டேன். முதலில் அதைக் கொல்லத்தான் முயல்வேன் என்று எழுதினார்.
 
அதனால்தான் நாடே வியக்கின்ற அளவுக்கு எவ்வளவு இழிவாகப் பேசினாலும் அதைத்தாங்கிக் கொள்கிறவர்கள் இருக்கிறார்களே அவர்கள் துறவிகளைவிடப் பெரியவர்கள் என்று வள்ளுவர் சொன்னார்.
 
நம்முடைய நாட்டுத் துறவிகளின் கதைகளைப் படித்தால் பெரிய சாபங்கள் இட்ட வரலாறுகள் அதிகம். அவர்களுக்கு கோபம் வந்தால் சபித்துவிடுவார்கள். அப்படிப்பட்டவர்களைத்தான் மகரிஷிகள் என்று புராணங்கள் சொல்லுகின்றன. அண்ணா அவர்கள் மற்றவர்கள் இழித்தும் பழித்தும் பேசிய போதும் கூட அதைத் தாங்கிக் கொண்டு மறு வார்த்தை பேசாமல் இருந்தார் என்றால் ஒரே ஒரு காரணம் – இனமானம்..
 
காரைக்குடி விழாவில் கலந்துகொள்ள அண்ணா அவர்கள் வந்தார்கள் . அதற்கு முன்பு நான் அவர்களை எழுத்தில் பேச்சில்தான் சந்தித்து இருக்கிறேன். சில சமயம் தொலைப்பேசியில் பேசியிருக்கிறேன்.
 
அவர் விழாவிற்கு வந்தார் என்றதும் மடத்துக்கு வருமாறு அழைத்தேன். இரவு உணவுக்கு வருவதாக ஒப்புக் கொண்டார். அப்போது நானும் அய்யாவும் வீரமணியும் வேறு ஒரு பேராயக்கட்சியை ஆதரித்துப் பேசிக்கொண்டு இருந்தோம்.
அண்ணா அவர்கள் வந்ததும் மிக அமைதியாக நான் கேட்டேன் : நீங்கள் யாருடனோ கூட்டு வைத்து இருக்கிறீர்கள் அது எந்த அளவு பயன் அளிக்கும்; அவர்களோடு கூட்டுச் சேர்ந்து எவரும் வெற்றிப் பெற்றதாக வரலாறு இல்லை; அவர்கள் வழியில் தான் அழைத்துச் செல்வார்களே தவிர நம்முடைய வழியில் வரமாட்டார்களே என்று சொன்னேன்.
 
உடனே அண்ணா அவர்கள் எப்போதும் போல் இரண்டே வரிகளில் சொன்னார்கள் “அவர்கள் நம்மைஉபயோகப்படுத்திக் கொள்வதைப் போல் நம்மால் அவர்களை உபயோகப்படுத்திக் கொள்ள முடியாது என்றுநம்புகிறீர்களா? என்று கேட்டார். அவ்வளவு பெரிய தலைவர் முன்னால் அதற்கு மேல் என்ன பேசுவது?
 
1967ல் அவர் அவர்களைப் உபயோகப்படுத்திக் கொண்டு அதற்குப் பிறகு யாரிடம் சேர வேண்டுமோ சேர்ந்தார்கள்.  காரணம் தமிழன் என்ற ஒரே காரனத்திற்காக. இன ஒருமைப்பாட்டைக் கட்டிக்காக்க வேண்டும் என்ற உணர்வு இருந்தது. அந்த வழியில் நாம் இன்றைக்கு இந்த எழுச்சியைப் பெற்று இருக்கிறோம். பல்வேறு சாதனைகளைப் பெற்று இருக்கிறோம்.
நம்முடைய நாட்டில் ஒவ்வொரு அடியையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று சொன்னால் இன்னும் வலிமையான பிரச்சார சாதனங்கள் நமக்கு இல்லை.
 
இந்த உணவு நல்ல உணவா என்று தேடி உண்ணுகின்ற தமிழன் இருக்கிறான். ஆனால் இந்தக் கருத்து இந்தப் பத்திரிகை  இந்த செய்தி நல்லனவா என்று தேடிப் பார்க்கும் உணர்வு நமக்கு வரவில்லை. அதனால்தான் பெரியார் பத்திரிகைகளையும் சேர்த்து சாபம் கொடுத்தார்.
 
நமது குறிக்கோள் – சாதிகளை ஒழிப்பது.
நமது குறிக்கோள் தமிழர்களை உயர்த்துவது.
நமது குறிக்கோள் தமிழனின் பண்பாட்டை உலக அளவில் உயர்த்துவது
தமிழனுடையச் செய்திகளை உலகுக்குக் கொண்டு சென்று கொடுப்பது
உலகத்தில் வேறு எந்த இனத்தையும்விட தமிழன் பெருமைக்கு உரியவன் என்பதனை உலகுக்கு அறிவித்தல்
 
இதற்கு எந்த வகையிலும் மதம் தடையாக இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய  கடப்பாடு அய்யாவுடன் பழகியதால் எனக்கு இருக்கிறது.

    -   Arul prakasam

Wednesday, March 11, 2020

திமுக மீதும் , தலைவர்கள் மீதும் இதுவரையிலும் கட்டமைக்கப்பட்ட பொய்கள் ஏராளம் , அதை உடைப்பது நம் கடமை.#FakeNews #Part1காஷ்மீர் விவகாரத்தில் பா.ஜ.க அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த தலைவருக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நன்றி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பொய்யாக பகிரப்பட்டு வந்தது. பாகிஸ்தான் பிரதமர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், திமுக தலைவருக்கு நன்றி தெரிவித்து எந்த ஒரு ட்வீட்டையும் வெளியிடவில்லை.ஒருவேளை ட்வீட் வெளியிட்டு அகற்றினாரா, இது தொடர்பாக பாகிஸ்தான் நாளிதழ்களில் செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடியபோது அப்படி எந்த ஒரு செய்தியும் இல்லை.மாநிலத்துக்கு அதிக அதிகாரம் வேண்டும், மாநில சுயாட்சி வேண்டும் என்று பேசி வரும் கட்சி தி.மு.க. காஷ்மீர் விவகாரத்தில், காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடத்தாமல், சட்டமன்றத்தை முடக்கிவைத்துவிட்டு 370வது பிரிவு நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது அக்கட்சி. அம்மாநில சட்டமன்றத்தின் தீர்மானம் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கேட்டு வருவது குறப்பிடத்தக்கது.....#தொடரும் #திமுகமீதானபொய்களைஉடை_உண்மையைசொல் #ஒன்றிணைவோம்_திமுக_நட்புகளே தகவல் வழங்கியது : shinkumar

Tuesday, March 10, 2020

திமுகவின் சாதனைகளை எவராலும் மறுக்க முடியாது மறக்கவும் முடியாது

என் தலைவர் #கலைஞர் அவர்கள் தமிழகத்திற்கு என்ன செய்தார்?

தெரியாத இளைய தலைமுறைகளுக்கு இதோ!!

1) இந்தியாவிலேயே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்.

2) குடியிருப்பு சட்டம் அதாவது வாடகை நிர்ணயம் சட்டம்
போன்றவைகளை அமைத்து தந்தது தலைவர் கலைஞர்.

3) இலவச கான்கிரீட் வீடுகளை ஒதுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தவர் கலைஞர்.

4) கையில் இழுக்கும் ரிக் ஷா ஒழித்து இலவச சைக்கில் ரிக் ஷா தந்தவர் கலைஞர்.

5) பிச்சைகாரர்களுக்கு மறு வாழ்வுமையம் அமைத்து கொடுத்தவர் கலைஞர்

6) முதலில் இலவச கண் சிகிச்சை முகாம் அமைத்து கொடுத்தவர் கலைஞர்.

7) குடிநீர் வடிகால் வாரியம் அமைத்து கொடுத்தவர் கலைஞர்.

8) தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்
அமைத்து தந்தவர் கலைஞர்.

9) 1500பேர் கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்து தந்தவர் கலைஞர்.

10) மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல
வழித்தடம் அமைத்து தந்தவர் கலைஞர்.

11.போக்குவரத்தை தேசியமயமாக்கிவர் கலைஞர்.

12.போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியவர் கலைஞர்.

13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்து தந்தவர் கலைஞர்.

14.அரசியலமைப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான அமைப்பை தந்தவர் கலைஞர்.

15.அரசியலமைப்பில் BC-31% , SC-18% ஆக உயர்த்தி தந்தவர் கலைஞர்.

16. P.U.C வரை இலவச கல்வி உருவாக்கி தந்தவர் கலைஞர்.

17. மே 1 சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தவர் கலைஞர்.

18. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை விடுமுறை தினமாக அறிவித்தவர் கலைஞர்.

19.முதல் விவசாயக் கல்லூரியை உருவாக்கி தந்தவர் கலைஞர்.(கோவை)

20. அரசு ஊழியர்கள் குடும்ப நலதிட்டம் தந்தவர் கலைஞர்.

21. அரசு ஊழியர்களுக்கு மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தவர் கலைஞர்.

22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தவர் கலைஞர்.

23. கோயில்களில் குழந்தைகளுக்கான கருணை இல்லம் தந்தவர் கலைஞர்.

24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்து தந்தவர் கலைஞர்.

25. நில விற்பனை வரையரை சட்டத்தை அமைத்தவர் கலைஞர்.

26.இரண்டாம் அலகு நிலக்கரி மின் உற்பத்தி நெய்வேலிக்கு கொண்டுவந்தவர் கலைஞர்.

27.பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலையை தூத்துகுடிக்கு கொண்டுவந்தவர் கலைஞர்.

28. SIDCO உருவாக்கியது கலைஞர்.

29. SIPCOT உருவாக்கியது கலைஞர்.

30.உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டோரில்
தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தவர் கலைஞர்.

31.பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டு வந்தவர் கலைஞர்.

32. மனு நீதி திட்டம் தந்தவர் கலைஞர்.

33. பூம்புகார் கப்பல் நிறுவனத்தை தந்தவர் கலைஞர்.

34. பசுமை புரட்சி திட்டத்தை தந்தவர் கலைஞர்.

35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தப்பட்டோரில் இணைத்தவர் கலைஞர்.

36. மிக பிற்படுத்தப்பட்டோரில் வன்னியர் சீர் மரபினரை சேர்த்தவர் கலைஞர்.

37. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.

38. தாழ்த்தப்பட்டோருக்கு 18% தனி இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.

39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.

40. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு இலவச
கல்வி தந்தவர் கலைஞர்.

41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளகலை பட்டப்படிப்பு வரை தந்தவர் கலைஞர்.

42. தாழ்த்தப்பட்டோர்களுக்கு இலவச கல்வி தந்தவர் கலைஞர்.

43. இந்தியாவிலேயே முதன் முறையாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தந்தவர் கலைஞர்.

44. சொத்தில் பெண்ணுக்கும் சம உரிமை உள்ளது என சட்டமாக்கியது கலைஞர்.

45. அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.

46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தவர்
கலைஞர்.

47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தவர் கலைஞர்.

48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தவர் கலைஞர்.

49. நேரடி நெல் கொள்முதல் மையம் அமைத்து தந்தவர் கலைஞர்.

50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம்
செய்தவர் கலைஞர்.

51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகத்தை அமைத்தவர்
கலைஞர்.

52.கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டத்தை தந்தவர் கலைஞர்.

53. பெண்கள் சுய உதவி குழுக்களை அமைத்து தந்தவர் கலைஞர்.

54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தை நிறுவியவர் கலைஞர்.

55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகத்தை நிறுவியவர் கலைஞர்.

56. டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ கல்லூரியை நிறுவியவர் கலைஞர்.

57. முதன் முதலில் காவிரி நீதிமன்றம் அமைக்க முற்பட்டவர் கலைஞர்.

58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டு வந்தவர் கலைஞர்.

59. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.

60. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தவர் கலைஞர்.

61. மெட்ராஸ்/சென்னை :கலைஞர் (Arignar Anna CM )

62. முதல் முறையாக விதவை பெண்களுக்கும் பொறியியல்
மற்றும் மருத்துவ கல்லூரியில் இடமளிக்க வழிவகை செய்தது கலைஞர்.

63. தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கை அமைத்து தந்தவர் கலைஞர்.

64. முதல் முறையாக விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் கலைஞர்.

65. கிராமங்களில் கான்கீரிட் சாலை அமைத்து தந்தவர் கலைஞர்.

66. 24 மணி நேரமும் மருத்துவ சேவை தந்தவர் கலைஞர்.

67. தொழில்முறை கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.

68. சமத்துவபுரம் தந்தவர் கலைஞர்.

69. கிராமங்களில் மினி-பஸ் சேவையை கொண்டு வந்தவர் கலைஞர்.

70. இந்தியாவிலேயே முதன் முறையாக டாக்டர் அம்பேத்கார் பெயரில் சட்ட கல்லூரியை நிறுவியவர் கலைஞர்.

71. பெரியார் பல்கலைகழகம் நிறுவியவர் கலைஞர்.

72. உலக தமிழர்களுக்கு உதவ தமிழ் மெய்நிகர் பல்கலைகழகத்தை தந்தவர் கலைஞர்.

73. உருது அக்காடமி தந்தவர் கலைஞர்.

74. சிறுபான்மையினர் பொருளாதார வளர்ச்சி அமைப்பை ஏற்படுத்தியவர்கலைஞர்.

75. உழவர்சந்தை திட்டத்தை தந்தவர் கலைஞர்.

76. வருமுன் காப்போம் திட்டத்தை தந்தவர் கலைஞர்.

77.கால்நடை பாதுகாப்பு திட்டத்தை தந்தவர் கலைஞர்.

78. 133 அடி திருவள்ளுவர் சிலை கன்னியாகுமாரியில் வைத்தவர்
கலைஞர்.

79. டைடல் பார்க் சென்னையில் அமைத்தவர் கலைஞர்.

80. வீட்டுமனை வழங்கும் திட்டத்தை தந்தவர் கலைஞர்.

81. மாவட்ட,மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் வருவோருக்கு மேற்படிப்பு உதவி தொகை தந்தவர் கலைஞர்.

82. ஆசியாவிலேயே மிக பெரிய பேருந்து நிலையம் சென்னை கோயம்பேடு நிலையம் அமைத்து தந்தவர் கலைஞர்.

83. விவசாய கூலி வேலை செய்வோர்களுக்கு
நலவாரியம் அமைத்து தந்தவர் கலைஞர்.

84. பொது கூலிவேலை செய்வோர்
நலவாரியம் அமைத்து தந்தவர் கலைஞர்.

85. அறிஞர்களுக்கும்,தியாகிகளுக்கும்
மணிமண்டபம் கட்டிதந்தவர் கலைஞர்.

86. 20 அணைகள் கட்டி தந்தவர் கலைஞர்.

87. பள்ளிகளில் உணவோடு முட்டை தந்தவர் கலைஞர்.

88. மதுரை நீதிமன்றம் கட்டி தந்தவர் கலைஞர்.

89. இலவச பஸ் பாஸ் தந்தவர் கலைஞர்.

90.அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை தந்தவர் கலைஞர்.

91. நமக்கு நாமே திட்டத்தை தந்தவர் கலைஞர்.

92. நலிவுற்ற குடும்பநல திட்டத்தை தந்தவர் கலைஞர்.

93. 9 மாவட்டங்களில் புதிய மாவட்டாச்சியர் அலுவலகங்களை கட்டி தந்தவர் கலைஞர்.

94. 104 கோடி ரூபாயில் சென்னை பொது மருத்துவமணை புதிய
கட்டிடம் தந்தவர் கலைஞர்.

95. 13000 மக்கள் நலப்பணியாளர்கள் நியமனம் செய்தவர் கலைஞர்.

96. முதல் முறையாக 10000 சாலை பணியாளர்களை நியமனம்
செய்தவர் கலைஞர்.

97. சென்னையில்போக்குவறத்து நெரிசலை தவிர்க்க 9
மேம்பாலங்களை கட்டி தந்தவர் கலைஞர்.

98. ரூ.1500 கோடியில் 350 துணை மின்நிலையங்களை உருவாக்கியவர் கலைஞர்.
99. ஒப்பந்த பணியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை தந்தவர் கலைஞர்.

100.போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய
திட்டத்தை தந்தவர் கலைஞர்.

101.வேலூர்,தூத்துகுடி,கன்னியாகுமரியில் புதிய மருத்துவ
கல்லூரிகளை அமைத்து தந்தவர் கலைஞர்.

102. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய். திட்டத்தை தந்தவர் கலைஞர்.

103. பொது விநியோக திட்டத்தின் மூலம் சமையல் எண்ணை மற்றும் பல வீட்டு பொருட்க்கள் நியாயவிலையில்
தந்தவர் கலைஞர்.

104. நியாயவிலைக்டையில் 10 சமையல்
பொருட்க்களை ரூ.50 க்கு தந்தவர் கலைஞர்.

105. விவசாய கடன் 7000 கோடியை தள்ளுபடி செய்யவைத்தவர்
கலைஞர்.

106. சரியான நேரத்தில் வங்கி கடனை திருப்பி செலுத்தும்
விவசாயிகளுக்கு வட்டி இல்லை என்றவர் கலைஞர்.

107. மேம்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ.1050 ஆக உயர்த்தியவர் கலைஞர்.

108. வகைப்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ.1100 ஆக உயர்த்தியவர் கலைஞர்.

109. 172 உழவர் சந்தைகளாக உயர்த்தியவர் கலைஞர்.

110. ஒரு டன் கரும்பின் கொள்முதல் விலை ரூ.2000 ஆக உயர்த்தியவர் கலைஞர்.

111. மாவட்டத்திற்குள் நதிநீர் இணைப்பு திட்டம் தந்தவர் கலைஞர்.

112. ரூ.189 கோடி செலவில் காவிரி- குண்டூர் நதிநீர் இணைப்பு திட்டம் தந்தவர் கலைஞர்.

113. ரூ.369 கோடி செலவில் தாமிரபரணி-கருமேனியாரு-நம்பியாரு நதிநீர் இணைப்பு திட்டம் தந்தவர் கலைஞர்.

114. காமராஜர் பிறந்த நாளை கல்வி மேம்பாட்டு தினமாக
அறிவித்தவர் கலைஞர்.

115. பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்தவர் கலைஞர்.

116. 10 ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயபாடமாக்கியது கலைஞர்.

117. 623 கோடி செலவில் 5824 கோவில்கள் புனரமைத்து கும்பாபிஷேகம் பணி செய்தவர் கலைஞர்.

118. அர்ச்சகர்கள்,பூசாரிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கியவர் 
.
119. ரூ.2 லட்சம் மதிப்புள்ள இலவச மருத்துவ காப்பீடு திட்டம் தந்தவர் கலைஞர்.

120. இதயநோய்,சர்க்கரை நோய்,புற்று நோய்க்கான நலமான
தமிழகம் திட்டம் தந்தவர் கலைஞர்.

121. மத்திய அரசோடு இணைந்து 108 ஆம்புலன்ஸ் சேவையை தந்தவர் கலைஞர்.

122. 25 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி 37 புதிய
நிறுவனங்களை வர செய்து 41,090 கோடி முதலீடை கொண்டுவந்தவர் கலைஞர்.

123. 37 நிறுவன அனுமதியால் 3 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தந்தவர் கலைஞர்.

124. 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு தந்தவர்
கலைஞர்.

125. புதிய டைடல் பார்க் திருச்சி,கோவை,மதுரை,திருநெல்வே
லியில் உருவாக்கியவர் 
.
126. அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டம் தந்தவர் கலைஞர்.

127. பேருந்து கட்டணம் ஏற்றாமல் 13000 புதிய பேருந்துகளை தந்தவர் கலைஞர்.

128. அருந்ததியினர் இனத்திற்கு 3% தனி இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.

129.அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளோடு 10,096
கிராம பஞ்சாயத்தை உருவாக்கியவர் கலைஞர்.

130. 420 பேரூராட்சிகள் உருவாக்கி அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தந்தவர் கலைஞர்.

131. அனைத்து இனத்தினரும் அர்ச்சகர் ஆகும் உரிமையை பெற்று தந்தவர் கலைஞர்.

132. உலக தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நிறுவியவர் கலைஞர்.

133.ஆசியாவையே திரும்பி பார்க்கவைத்த
புதிய சட்டமன்றம் நிறுவியவர் கலைஞர்.

134. அடையார் சூழியல் ஆராய்ச்சி பூங்கா அமைத்தவர் கலைஞர்.

135.சென்னை செம்மொழி பூங்கா அமைத்து தந்தவர்
கலைஞர்.

136. கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் தந்தவர் கலைஞர்.

137. ஜப்பான் நாட்டு வங்கி உதவியோடு மெட்ரோ ரயில்
திட்டம் தந்தவர் கலைஞர்.

138. ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தந்தவர் கலைஞர்.

139. ராமநாதபுரம்-பரமக்குடி கூட்டு குடிநீர் திட்டம் தந்தவர்
கலைஞர்.

140. கலைஞர் வீடு திட்டம் தந்தவர் கலைஞர்.

141. முதல் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தியவர் கலைஞர்.

142.தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர் கலைஞர்.

143. 119 புதிய நீதிமன்றங்களை உருவாக்கியவர்
கலைஞர்.

144. மாலை நேரம் மற்றும் விடுமுறை தின
நீதிமன்றங்களை உருவாக்கி தந்தவர் கலைஞர்.

145. அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகம் திருச்சி,கோவை,ம
துரை,திருநெல்வேலியில் உருவாக்கி தந்தவர் கலைஞர்.

146. தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய
ஆணையம் அமைத்து தந்தவர் கலைஞர்.

147. சமச்சீர் கல்வி தந்தவர் கலைஞர்.

148. இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டம்
தந்தவர் கலைஞர்.

149. முதல் பட்டதாரிக்கு ஆண்டுக்கு 20,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு 80,000 பொறியியல் கல்வி கட்டணம் வழங்கியவர் கலைஞர்.

150. இஸ்லாமியர்களுக்கு 3.5% தனி இட ஒதுக்கீடு வழங்கியவர் 
.
151. இலவச எரிவாயு உருளை வழங்கியவர் கலைஞர்.

152. பேருந்து,பால்,மின்சார கட்டணங்களை உயர்த்தாதவர் கலைஞர். # ஏன் என்றால் அது ஏழை,நடுத்தரவர்க்கங்களின் அவசிய பயன்பாடு.

153. மாவட்ட தலைநகரங்களில் மருத்துவ
கல்லூரி,பொறியியல் கல்லூரி துவக்கியவர் கலைஞர்.

இப்படி இன்னும் பல கலைஞர் வகுத்த
மக்கள் நலத் திட்டங்கள் அதிகம்
இருக்கிறது.நண்பர்களே #தமிழக
மக்களின் நலமே கலைஞரின் நலம்.!!

கழகத்தின் அடிமட்டத் தொண்டன்,6 மார்ச் 1967 ல் முதல்முறையாக தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது.